ஆசிரியர் தகுதி தேர்வில் கேள்வித்தாள் குழப்பம்: போனஸ் மார்க் வழங்க தேர்வு வாரியம் முடிவு! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 31, 2013

ஆசிரியர் தகுதி தேர்வில் கேள்வித்தாள் குழப்பம்: போனஸ் மார்க் வழங்க தேர்வு வாரியம் முடிவு!

ஆசிரியர் தகுதி தேர்வில் 3 கேள்விகள் குழப்பமாக இருப்பதால்,அந்த கேள்விகளுக்கு போனஸ் மார்க் வழங்க ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவு செய்துள்ளது.தமிழகத்தில் கடந்த 17 மற்றும் 18 ஆம் தேதிகளில் ஆசிரியர்களுக்கான தகுதி தேர்வு நடந்தது. இதில் இடைநிலை ஆசிரியர்களுக்கான முதல் தாள் தேர்வை 4 லட்சம் பேரும், 2 ஆம் தாள் தேர்வை 3 லட்சம் பட்டதாரி ஆசிரியர்களும் எழுதினர்.தகுதி தேர்வுக்கான விடைகளை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது.விடைகளில்
குழப்பங்கள் இருந்தால் வரும் செப்டம்பர் 2 ஆம் தேதி மாலை 6 மணிக்குள் தேர்வு வாரியத்தின் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கலாம் என்றும் ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.இதைத் தொடர்ந்து ஆசிரியர்கள் பலரும் கருத்துக்களை தெரிவித்துவருகின்றனர். இதன் அடிப்படையில் இடைநிலை ஆசிரியர்களுக்கான தேர்வில் 2 கேள்விகளில் குழப்பங்கள் இருப்பதாகவும், பட்டதாரி ஆசிரியர்களுக்கான தேர்வில் ஒரு கேள்வியில் குழப்பங்கள் இருப்பதாக தெரிகிறது.இதையடுத்து இந்த கேள்விகளுக்கு போனஸ் மார்க் வழங்க ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவு செய்துள்ளது. இது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று தேர்வு வாரிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

2 comments:

  1. bonus mark paper 2 ku 3 mark kudunga pa plz

    ReplyDelete
  2. paper 2 la niraya kulappam irukku eng & maths & psychology

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி