முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு திறன் வளர்ப்பு பயிற்சி முகாம். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 24, 2013

முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு திறன் வளர்ப்பு பயிற்சி முகாம்.

மாநில கல்வியியல் ஆராய்ச்சி பயிற்சி நிறுவத்தின் சார்பில்  முதுகலை பட்டாதாரி ஆசிரியர்களுக்கு பாடப் பொருள் குறித்த திறன் வளர்ப்பு பயிற்சி முகாம் வருகிற 26-ம் தேதி தொடங்கிநடைபெற இருக்கிறது. மாநில கல்வியியல் ஆராய்ச்சி பயிற்சி நிறுவனம் மற்றும் அந்தந்த மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களின் சார்பில் இப்பயிற்சி முகாம் நடத்தப்பட இருக்கிறது.இதில், மாணவ, மாணவிகள் பாடங்களில் பொருள்களை எளிதாக புரிந்து கொள்ளும், அதிகம மதிப்பெண் எடுக்க வைக்க வேண்டும். மேலும், ஒவ்வொரு பாடத்திலும் தேர்ச்சி பெற வைக்கும் வகையிலும், 100 சதவீதம் தேர்ச்சி பெற வைக்க வேண்டும் என்பதை முக்கிய குறிக்கோளாக கொண்டு இப்பயிற்சி வகுப்பு சிறப்பு ஆசிரியர்களைக் கொண்டு நடத்தப்படுகிறது. அதன் அடிப்படையில் ஆங்கிலம், கணிதம், வணிகவியல், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல் ஆகிய ஒவ்வொரு பாடங்களிலும் தலா இரண்டுநாள்கள் ஆக.26-ம் தேதி தொடங்கி, தொடர்ந்து செப்-11ம் தேதி வரையில் பயிற்சி அளிக்கப்பட இருக்கிறது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி