10ம் வகுப்பு உடனடி தேர்வு: தத்கல் திட்டம் அறிவிப்பு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 17, 2013

10ம் வகுப்பு உடனடி தேர்வு: தத்கல் திட்டம் அறிவிப்பு.

பத்தாம் வகுப்பு உடனடி தேர்வுக்கு, தத்கல் திட்டத்தின் கீழ், இன்று இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம்.பத்தாம் வகுப்பு உடனடித் தேர்வு, விரைவில் துவங்க உள்ளது
. இத்தேர்வை எழுத, ஏற்கனவே விண்ணப்பிக்க தவறிய மாணவர்கள், தத்கல் திட்டத்தின் கீழ்,www.dge.tn.nic.in, என்ற இணையதளம் வழியாக, இன்று (17ம் தேதி) மாலை, 5:00 மணி வரை விண்ணப்பிக்கலாம்.ஒரு பாடத்திற்கு, 125 ரூபாய் மற்றும் சிறப்பு கட்டணம், 500 ரூபாய் செலுத்த வேண்டும். இணையதளம் வழியாக பதிவிறக்கம் செய்யும் செலான் மூலம், வங்கியில், தேர்வு கட்டணத்தை செலுத்த வேண்டும்.இணையதளத்தில் பூர்த்தி செய்து, புகைப்படத்துடன் பதிவிறக்கம் செய்யப்பட்ட விண்ணப்பத்துடன், தேர்வுக் கட்டணம் செலுத்திய ரசீதுமற்றும் கடந்த மார்ச்சில் எழுதி பெற்ற மதிப்பெண் பட்டியலை இணைத்து, 18ம் தேதி, சென்னை, வேலூர், கடலூர், திருச்சி, கோவை, மதுரை, நெல்லையில் உள்ள அரசு தேர்வுகள் மண்டல துணை இயக்குனர் அலுவலகத்தில், நேரில் சமர்ப்பித்து, ஹால் டிக்கெட்டை பெற்றுக் கொள்ள வேண்டும். இவ்வாறு, தேர்வுத் துறை தெரிவித்து உள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி