மத்திய அரசு ஊழியர்களுக்கு 10% அகவிலைப்படி குறித்த அறிவிப்பு வெள்ளிக்கிழமை வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 18, 2013

மத்திய அரசு ஊழியர்களுக்கு 10% அகவிலைப்படி குறித்த அறிவிப்பு வெள்ளிக்கிழமை வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

மத்திய அரசு ஊழியர்களுக்கு 10% அகவிலைப்படி உயர்த்தப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.ஜூலை 1ந் தேதி தேதியிட்டு அகவிலைப்படியை உயர்த்தி
வழங்க திட்டமிட்டுள்ள மத்திய அரசு, இதற்கான அறிவிப்பை வரும் வெள்ளி அன்று வெளியிடும் எனத் தெரிகிறது. நடப்பு நிதியாண்டில் 2வது முறையாக அகவிலைப்படியை மத்திய அரசு உயர்த்துகிறது. கடந்த ஏப்ரல் மாதம் 80%ஆக உயர்த்தப்பட்ட அகவிலைப்படி தற்போது 90%ஆக உயர்கிறது. கடந்த 2010ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் இரட்டை இலக்கத்தில் அகவிலைப்படி உயர்த்தப்பட்ட பிறகு தற்போதும் 10% உயர்த்தப்படுகிறது. இதன் மூலம் 50 லட்சம் ஊழியர்கள் 30 லட்சம் ஒய்வு ஊதியத்தாரர்கள் பலன் பெறுவார்கள் என மத்திய அரசு வட்டாரங்கள் கூறுகின்றன. நுகர்வோர் விலை குறியீடு அடிப்படையில் அகவிலைப்படியிலிருந்து குறிபிட்ட தொகை அடிப்படை ஊதியத்தில் இணைக்கப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

3 comments:

  1. Replies
    1. After10 or 15 days

      Delete
    2. Thanks dear!
      What about the last sentence in the above post ? I didn't get it?
      If possible, explain !!!

      Delete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி