147 கிராம ஊராட்சிகளில் 16,726 துப்புரவு பணியாளர்களை நியமிக்க முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 16, 2013

147 கிராம ஊராட்சிகளில் 16,726 துப்புரவு பணியாளர்களை நியமிக்க முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

தற்பொழுது ஊராட்சிகளில் பணியாற்றும் துப்புரவு பணியாளர்களின் எண்ணிக்கை,அங்குள்ள மக்கள் தொகைக்கு ஏற்றவாறு இல்லாமல் மிகவும் குறைந்த எண்ணிக்கையில் உள்ளது.எனவே தமிழகம் முழுவதும்
தூய்மை கிராம இயக்கத்தினை நன்முறையில் செயல்படுத்த மக்கள் தொகை 3,000க்கும் கீழ் உள்ள8,469கிராம ஊராட்சிகளில்,ஒவ்வொரு கிராம ஊராட்சிக்குகூடுதலாக ஒன்று வீதமும், 3,001முதல்10,000வரைஉள்ள3,908 கிராம ஊராட்சிகளில்,ஒவ்வொரு கிராம ஊராட்சிக்கு கூடுதலாக இரண்டு வீதமும், 10,000க்கும் மேற்பட்ட மக்கள் தொகை கொண்ட147கிராம ஊராட்சிகளில்,ஒவ்வொரு கிராம ஊராட்சிக்கும் கூடுதலாக மூன்று வீதமும்,ஆக மொத்தம்16,726துப்புரவு பணியாளர் பணியிடங்களை கூடுதலாக ஏற்படுத்திட முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
புதியதாக உருவாக்கப்படும் பணியிடங்களில் பணியமர்த்தப்படுபவர்களுக்கு மாதந்தோறும் தொகுப்பூதியமாக2,000 ரூபாயும்,அகவிலைப் படியாக40 ரூபாயும் வழங்கப்படும். இதன் மூலம் ஆண்டொன்றுக்கு41கோடியே81லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் செலவினம் ஏற்படும்" என்று கூறப்பட்டுள்ளது.

1 comment:

  1. 147 கிராம ஊராட்சிகளில் 16,726 துப்புரவு பணியாளர் பணிக்கு விண்ணபிக்க விண்ணப்பம் பெறுவது & ஆன்லைனில் விண்ணப்பம் பெறுவது எப்படி என்று சொல்லுங் சார் ....

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி