வழக்கு தொடுத்த 1,528 ஓய்வு பெற்ற தலைமைஆசிரியர்களுக்கு மட்டுமே பணப்பலன் வழங்க, தமிழக அரசுஉத்தரவிட்டுள்ளது. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 16, 2013

வழக்கு தொடுத்த 1,528 ஓய்வு பெற்ற தலைமைஆசிரியர்களுக்கு மட்டுமே பணப்பலன் வழங்க, தமிழக அரசுஉத்தரவிட்டுள்ளது.

Click here to download -1528 Eligible Primary headmasters list
click here -ELE.Dir proceedings order Reg 179 G.O
1988 ஜூன் 1க்கு முன், தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர்களாக பதவி உயர்வு பெற்றவர்களுக்கு, இடை நிலைஆசிரியர் பணிக்காலத்தையும் சேர்த்து, தலைமை ஆசிரியர் பதவியில்,தேர்வுநிலை,
சிறப்புநிலை வழங்கப்பட்டது. ஆனால்,1988 ஜூன்1க்கு, பிறகு, 1995 டிச., 31 வரை, பதவிஉயர்வு பெற்றவர்களுக்கு, வழங்கப்படவில்லை. இதையடுத்து,தமிழக நிர்வாக தீர்ப்பாயத்தில் வழக்கு தொடுத்த, 63 ஓய்வு பெற்ற தலைமைஆசிரியர்களுக்கு மட்டும், இடைநிலை ஆசிரியர் பணிக்காலத்தையும் சேர்த்து, தலைமைஆசிரியர் பதவியில்,தேர்வுநிலை, சிறப்புநிலை வழங்க உத்தரவிடப்பட்டது. இதை பின்பற்றி, 1,528 பேர் மீண்டும் வழக்கு தொடுத்தனர். அவர்களுக்கும்,வழக்கு தொடுக்காதவர்களுக்கும் இடைநிலை ஆசிரியர் பணிக்காலத்தையும்சேர்த்து, தலைமைஆசிரியர் பதவியில்,தேர்வுநிலை, சிறப்புநிலை வழங்கவும், பணப்பலன் வழங்கவும் அரசு உத்தரவிட்டது. இதற்காக, அரசுக்கு பல கோடி ரூபாய் தேவைப்பட்டதால், அரசு உத்தரவை செயல்படுத்துவதில் சிக்கல் நீடித்தது. இந்நிலையில், வழக்கு தொடுத்த 1,528 பேருக்கு மட்டும்,தேர்வு நிலை, சிறப்பு நிலை மற்றும் பணப்பலன் வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி