கோட்டையை நோக்கி 2வது நாளாக பேரணி பெண் ஆசிரியர்கள் உள்பட 8 ஆயிரம் பேர் கைது . - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 26, 2013

கோட்டையை நோக்கி 2வது நாளாக பேரணி பெண் ஆசிரியர்கள் உள்பட 8 ஆயிரம் பேர் கைது .

ஏழு அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி கோட்டை நோக்கி தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் இன்று 2வது நாளாக ஊர்வலமாக சென்றனர். அவர்களை தடுத்து நிறுத்தி  போலீசார் கைது செய்தனர். தமிழகம் முழுவதும் உள்ள தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள்

7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 25ம் தேதி முதல் சென்னையில் கோட்டை முன்பு தொடர் மறியல் போராட்டத்தில் ஈடுபட தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி ஏற்கெனவே அறிவித்தது. 

 மத்திய அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் தமிழ்நாட்டு பள்ளி ஆசிரியர்களுக்கும் வழங்க வேண்டும். குறிப்பாக இடைநிலை ஆசிரியர்களுக்கு மாதம் ஒன்றுக்கு அடிப்படை ஊதியம் மற்றும் அகவிலைப்படி சேர்த்து வழங்கப்பட வேண்டும்.  புதிய ஓய்வு ஊதிய திட்டத்தை ரத்து செய்து விட்டு பழைய ஓய்வு ஊதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்

மேலும் ஆசிரியர் தகுதித் தேர்வை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி நேற்று முதல் தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் சென்னையில் தொடர் மறியல் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.முதல் நாளான நேற்று 5000 ஆசிரியர்கள் பங்கேற்று கைதானார்கள். இன்று  அருமைகண், புஷ்பராணி தலைமையில் பெண் ஆசிரியர்கள் 5ஆயிரம் உள்பட 8 ஆயிரம் பேர் சேப்பாக்கத்தில் இருந்து கோட்டையை நோக்கி ஊர்வலமாக செல்ல முயன்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். முன்னதாக இந்த போராட்டத்தை ஆதரித்து தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர்கள் மற்றும் அடிப்படை பணியாளர்கள் சங்க தலைவர் கே.கணேசன் பேசினார்.

4 comments:

  1. ellam ok. but tet exam cancel seiyya solrathu thappu.

    ReplyDelete
  2. Na 2006 D.Ted mudicha 2006-2011 varaikum seniority follow pannanga appave enaku exam vachu iruntha na pass panni iruppa 6 years apparam exam padikka solrathu niyama
    1 to 8 books memory panni padichu pass panrathu tha talent ah

    ReplyDelete
  3. poradiya teachers ellorukkum manamarntha nanrigal.poraduvom vertiperuvom.namathu urimai velvom.naam ketpathu nayam.athai ketpom velvom

    ReplyDelete
  4. போராடும் ஆசிரியபெருமக்களை வணங்குகிறேன்

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி