அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில், ஆசிரியர் அல்லாத, 2,000 பணியிடங்களை நிரப்ப, பள்ளி கல்வித்துறை, நடவடிக்கை எடுத்துள்ளது. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 18, 2013

அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில், ஆசிரியர் அல்லாத, 2,000 பணியிடங்களை நிரப்ப, பள்ளி கல்வித்துறை, நடவடிக்கை எடுத்துள்ளது.

அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில், ஆசிரியர் அல்லாத, 2,000 பணியிடங்களை நிரப்ப, பள்ளி கல்வித்துறை, நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த பணியிடங்களை நிரப்ப, அரசின் ஒப்புதலை,
துறை கோரியுள்ளது.தமிழகத்தில் 36,813 அரசு பள்ளிகளும், 8,395 அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளும் இயங்குகின்றன. இந்த, இரு தரப்பு பள்ளிகளிலும், புத்தக பை, வண்ண பென்சில்கள், கணித உபகரண பெட்டி, பாடப் புத்தகங்கள், நோட்டு புத்தகங்கள், சைக்கிள் உள்ளிட்ட 14வகையான, இலவச திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.இந்த திட்டங்கள் தொடர்பான கோப்புகளை பராமரிக்கும் பணி மற்றும் பள்ளி நிர்வாக பணிகளில், இளநிலை உதவியாளர், தட்டச்சர் உள்ளிட்டோர் ஈடுபடுகின்றனர். அரசு நல திட்டங்களை, அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில், தடையின்றி வினியோகிக்கவும், பள்ளிநிர்வாகம் சிறப்பாக இயங்கவும், ஆசிரியர் அல்லாத காலி பணியிடங்களை நிரப்ப வேண்டி உள்ளது.பள்ளி கல்வித்துறை எடுத்த கணக்கெடுப்பில், அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில், 2,000 ஆசிரியர் அல்லாத பணியிடங்கள் காலியாக இருப்பது தெரிய வந்தது. இந்த பணியிடங்கள் அனைத்தும், ஏற்கனவே ஒதுக்கீடு செய்யப்பட்ட பணியிடங்கள். எனவே, இந்த பணியிடங்களை நிரப்ப, நடவடிக்கை எடுக்குமாறு, கோட்டைக்கு, பள்ளி கல்வித்துறை, கோப்பு அனுப்பி வைத்தது.இதுதொடர்பான கோப்பு, தற்போது, நிதித்துறையின் ஒப்புதலுக்காக காத்திருக்கிறது. "நிதித்துறை ஒப்புதல் அளித்ததும், முதல்வரிடம்ஆலோசனை பெற்று, இந்த பணியிடங்கள் நிரப்ப, நடவடிக்கை எடுக்கப்படும்" என அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.அவர் மேலும் கூறுகையில், "தற்போதைய, நிதி நெருக்கடியான சூழலில்,புதிய பணியிடங்களுக்கு, கண்டிப்பாக, அரசின் அனுமதி கிடைக்காது. ஆனால், பழைய பணியிடங்களை நிரப்புவதில், அரசு அனுமதி அளிக்கும் என நம்புகிறோம்" என்றார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி