காலாண்டு தேர்வு விடுமுறை முடிந்து பள்ளி திறக்கும் நாளானஅக்டோபர் 3-ந்தேதி மாணவர்களுக்கு 2-ம் பருவ பாடபுத்தகம் வழங்க இயக்குநர் உத்தரவு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 19, 2013

காலாண்டு தேர்வு விடுமுறை முடிந்து பள்ளி திறக்கும் நாளானஅக்டோபர் 3-ந்தேதி மாணவர்களுக்கு 2-ம் பருவ பாடபுத்தகம் வழங்க இயக்குநர் உத்தரவு.

காலாண்டு தேர்வு விடுமுறை முடிந்து பள்ளிக்கூடங்கள் அக்டோபர் மாதம் 3ந் தேதி திறக்கப்படுகின்றன. அன்று மாணவர்கள் அனைவருக்கும்
2ம் பருவத்திற்கான பாட புத்தகங்கள், நோட்டுகள் அனைத்தும் வழங்கப்படும் என்று பள்ளிக்கல்வி இயக்குனர் வி.சி.ராமேஸ்வர முருகன் தெரிவித்தார்.
காலாண்டு தேர்வுகள்
தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் தொடக்கப்பள்ளிகள், நடுநிலைப்பள்ளிகள், உயர்நிலைப்பள்ளிகள், மேல்நிலைப்பள்ளிகள் அனைத்திலும் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு விலை இல்லா பாடப்புத்தகம் வழங்கப்பட்டு வருகின்றன. அதுபோல விலை இல்லா நோட்டு புத்தகங்களும் கொடுக்கப்படுகின்றன.தற்போது அனைத்து மாணவ-மாணவிகளுக்கும் காலாண்டுதேர்வு நடைபெற்று வருகிறது. தமிழ்நாடு முழுவதும் எஸ்.எஸ்.எல்.சி.மற்றும் பிளஸ்-2 மாணவர்களுக்கு பொது வினாத்தாள் வழங்கப்பட்டு வருகிறது. தேர்வுகள் அனைத்தும் வருகிற 21-ந்தேதிக்குள் முடிக்கப்பட்டு விடுமுறை விடப்படுகிறது.
அக்டோபர் 2-ந்தேதிவிடுமுறை முடிந்து பள்ளிக்கூடங்கள் அனைத்தும் அக்டோபர் மாதம் 3-ந்தேதி திறக்கப்படுகின்றன.தற்போது மாணவர்களின் புத்தகச்சுமையை குறைக்க பாடப்புத்தகங்கள் காலாண்டுவரை ஒரு பருவமாகவும், அரையாண்டுவரை 2-வது பருவமாகவும் முழு ஆண்டுக்கு 3-வதுபருவமாகவும் வழங்கப்படுகிறது. இது 9-ம் வகுப்புவரை இந்தபருவமுறை கொண்டுவரப்பட்டுள்ளது.அதன்படி முதல் பருவம் முடிந்து அக்டோபர் 3-ந்தேதி 2-வது பருவம் தொடங்குகிறது. அன்று அனைத்து மாணவ-மாணவிகளுக்கும் விலை இல்லா பாடப்புத்தகம், நோட்டு புத்தகம் வழங்கப்பட உள்ளது. அதற்காக ஏற்கனவே அனைத்து பள்ளிகளுக்கும் பாடப்புத்தகங்கள், நோட்டு புத்தகங்கள் வினியோகிக்கப்பட்டு விட்டன.எனவே தலைமை ஆசிரியர் கண்காணிப்பில் அந்தந்த வகுப்பு ஆசிரியர்கள் மாணவர்களுக்கு உரிய பாடப்புத்தகங்கள், நோட்டு புத்தகங்களை வழங்குவார்கள்.இந்த தகவலை பள்ளிக்கல்வி இயக்குனர் வி.சி.ராமேஸ்வர முருகன் தெரிவித்தார். இளங்கோவன் தொடக்க கல்வி இயக்குனர் ரெ.இளங்கோவன் கூறுகையில் அனைத்து தொடக்கப்பள்ளிகள், நடுநிலைப்பள்ளிகளிலும் விலை இல்லா பாடப்புத்தகங்கள், நோட்டு புத்தகங்கள் மாணவர்களுக்கு வழங்க தயார் நிலையில் உள்ளது. பள்ளிக்கூடம் திறந்த அன்று எல்லா மாணவர்களுக்கும்வழங்கப்படும் என்றார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி