ஆசிரியர் தகுதித் தேர்வில் 3 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும், தேர்ச்சிக்கான மதிப்பெண்களை 40 சதவீதம் குறைவாக நிர்ணயம் செய்ய வேண்டும் என மாற்றுத்திறனாளிகள் போராட்டம். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 19, 2013

ஆசிரியர் தகுதித் தேர்வில் 3 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும், தேர்ச்சிக்கான மதிப்பெண்களை 40 சதவீதம் குறைவாக நிர்ணயம் செய்ய வேண்டும் என மாற்றுத்திறனாளிகள் போராட்டம்.

தமிழக முதல‌மைச்சரை சந்திக்க அனுமதி மறுக்கப்பட்டதைக் கண்டித்துமெரினா கடற்கரைச் சாலையில் மறியலில் ஈடுபட்ட,
300க்கும் மேற்பட்ட பார்வையற்ற பட்டதாரிகளை போலீசார் கைது செய்தனர்.ஆசிரியர் தகுதித் தேர்வில் 3 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும், தேர்ச்சிக்கான மதிப்பெண்களை 40 சதவீதம் குறைவாக நிர்ணயம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட ஒன்பது அம்ச கோரிக்கைகளை பார்வையற்ற பட்டதாரிகள் முன்வைத்துள்ளனர்.தங்கள் கோரிக்கைகளை தமிழக முதலமைச்சரை நேரில் சந்தித்து தெரிவிக்க, அவர்கள் திட்டமிட்டிருந்தனர். ஆனால் முதலமைச்சரை நேரில் சந்திக்க அனுமதி மறுக்கப்பட்டதால், கடந்த நான்கு நாட்களாக பல்வேறு போராட்டங்களை அவர்கள் நடத்தி வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக இன்று திருவல்லிக்கேணி கண்ணகி சிலை அருகே அவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.இதனால் காமராசர் சாலையில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.இதனையடுத்து மறியலில் ஈடுபட்ட அனைவரையும் கைது செய்த போலீசார், மயிலாப்பூரில் உள்ள தனியார் திருமண மண்டபம் ஒன்றில் அவர்களை தங்க வைத்துள்ளனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி