50 நடுநிலை பள்ளிகள் தரம் உயர்வு: தாமத நடவடிக்கையால் பலனில்லை. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 22, 2013

50 நடுநிலை பள்ளிகள் தரம் உயர்வு: தாமத நடவடிக்கையால் பலனில்லை.

மாநிலம் முழுவதும், 50 அரசு நடுநிலைப் பள்ளிகளை, உயர்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தி,
தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது. அரசின் இந்த காலம், கடந்த நடவடிக்கையால், 9, 10ம் வகுப்பில், மாணவர்கள் சேர முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. கடந்த பட்ஜெட் கூட்டத்தொடரின்போது, "50 நடுநிலைப் பள்ளிகள், நடப்பு கல்வி ஆண்டில் தரம் உயர்த்தப்படும்' என்ற அறிவிப்பை, முதல்வர், ஜெயலலிதா வெளியிட்டார். கல்வியாண்டு துவங்கி, நான்கு மாதங்கள் ஓடிவிட்டன. காலாண்டு தேர்வும் முடிந்துவிட்டது. கல்வி ஆண்டு துவக்கமான, ஜூனில் அறிவித்திருந்தால், 50 நடுநிலைப் பள்ளிகளில், எட்டாம் வகுப்பு முடித்த மாணவ, மாணவியர், தொடர்ந்து, அதே பள்ளிகளில், ஒன்பதாம் வகுப்பில் சேர்ந்திருப்பர்.ஆனால், அரசின் காலம் கடந்த நடவடிக்கையால், எட்டாம் வகுப்புமுடித்த மாணவர்கள் அனைவரும், வேறு பள்ளிகளுக்கு சென்றுவிட்டனர். பெரும்பாலான மாணவர்கள், தனியார் பள்ளிகளுக்கு சென்றுவிட்டனர். இந்நிலையில், தரம் உயர்த்தப்பட்டு உள்ள, 50 நடுநிலைப் பள்ளிகள் பட்டியலை, தமிழக அரசு, வெளியிட்டு உள்ளது. மாவட்டதிற்கு, ஒன்று அல்லது இரு பள்ளிகள், தரம் உயர்த்தப்பட்டு உள்ளன. ஒரு பள்ளிக்கு, ஐந்து பட்டதாரி ஆசிரியர் வீதம், 250 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் மற்றும் 250 உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடங்கள் தோற்றுவிக்கப்பட்டு, அவை, பதவி உயர்வு மூலம் நிரப்பப்படும் என, அரசாணையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.இதனால் அரசுக்கு, ஆண்டுக்கு, 7.41 கோடி ரூபாய் கூடுதல்செலவு ஏற்படும். தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளில் படிக்கும்,பிற வகுப்பு மாணவர்களுக்காக, ஏற்கனவே உள்ள நடுநிலைப் பள்ளிகள், ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை கொண்ட, ஆரம்ப பள்ளிகளாக, நிலை குறைக்கப்படும் என்றும், அரசு தெரிவித்து உள்ளது. அதன்படி, அதே பள்ளி வளாகத்தில், ஒன்று முதல், ஐந்தாம் வகுப்புகளுடன், ஆரம்ப பள்ளி தனியாக செயல்படும். ஆறாம் வகுப்பு முதல், 10ம் வகுப்பு வரை கொண்ட வகுப்புகள், உயர்நிலைப் பள்ளிகளாக செயல்படும்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி