கோட்டை நோக்கி ஊர்வலம் தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் 5 ஆயிரம் பேர் கைது - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 26, 2013

கோட்டை நோக்கி ஊர்வலம் தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் 5 ஆயிரம் பேர் கைது

சென்னை : கோட்டை நோக்கி ஊர்வலம் சென்ற தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் 5 ஆயிரம் பேரை போலீசார் நேற்று கைது செய்தனர். மத்திய அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு
இணையான ஊதியம் தமிழகத்திலும் வழங்கவேண்டும், ஏற்கனவே கடைப்பிடித்து வந்த ஓய்வூதிய முறை கடைப்பிடிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னை கோட்டையை முற்றுகையிடும் போராட்டம் நடத்த, தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இப்போராட்டத்தில் ஈடுபட சென்னை சேப்பாக்கம் அரசு விருந்தினர் மாளிகை அருகே சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் நேற்று காலை திரண்டனர்.  

இதில் அகில இந்திய தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் பொது செயலாளர் ஈஸ்வரன் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். இதை தொடர்ந்து மாநில தலைவர் காமராஜ், பொதுச்செயலாளர் ரங்கராஜன், பொருளாளர் ஜோசப் சேவியர் உள்ளிட்டோர் தலைமையில் அங்கு திரண்டிருந்த சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கோட்டை நோக்கி புறப்பட்டனர். அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார், அவர்களை வழிமறித்து கைது செய்து, நேரு விளையாட்டு அரங்கத்தில் அடைத்தனர்.மாலையில் அனைவரும் விடுவிக்கப்பட்டனர். 

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் சங்க உறுப்பினர்களாக உள்ள 5 ஆயிரம் ஆசிரியைகள் சென்னை சேப்பாக்கம் அரசு விருந்தினர் மாளிகை அருகே இன்று காலை திரண்டு போராட்டத்தில் ஈடுபடுகின்றனர் என்றும், போராட்டம் நேற்று முதல் 7 நாட்களுக்கு நடக்க இருப்பதாக கூட்டணி நிர்வாகிகள் தெரிவித்தனர்

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி