தமிழ்நாடு திறந்தநிலை பல்கலையில் நேரடி கல்வி முறையில் பி.எச்டி., - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 15, 2013

தமிழ்நாடு திறந்தநிலை பல்கலையில் நேரடி கல்வி முறையில் பி.எச்டி.,

தமிழ்நாடு திறந்த நிலை பல்கலைக்கழகத்தில் முதல் முறையாக, நடப்பு கல்வியாண்டில், நேரடி கல்வி முறையில், எம்.பில்., மற்றும் பி.எச்டி., பட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. குடும்ப சூழ்நிலை காரணமாக
பள்ளி படிப்பை பாதியில் கைவிட்டமாணவர்கள், தொலைதூர கல்வி முறையில் படிக்கின்றனர். தமிழகத்தில், அண்ணாமலை, மதுரை, திறந்தநிலை பல்கலைக்கழகம், சென்னை பல்கலைக்கழகம் உள்ளிட்ட, பத்து பல்கலைக்கழகங்களில் தொலைதூர கல்வி வழங்கப்படுகிறது. இதில், லட்சக்கணக்கான மாணவர்கள் கல்வி கற்கின்றனர். இதில், இளங்கலை, முதுகலை ஆய்வு படிப்புகளும் வழங்கப்பட்டு வந்தன. இந்நிலையில், தொலைதூர கல்வி நிறுவனம் மூலம், ஒரு பல்கலைக்கழகத்தில், ஒரு ஆண்டிற்கு 500க்கும் மேற்பட்ட ஆய்வு பட்டங்கள் வழங்கப்பட்டன. தரம் குறைந்த கல்வி வழங்கப்பட்டதாக புகார் எழுந்ததையடுத்து, பல்கலைக்கழக மானியகுழு (யு.ஜி.சி.,) தொலைநிலை கல்வியில் எம்.பில்., மற்றும்பி.எச்டி., பட்டங்கள் வழங்க தடை விதித்தது.இதையடுத்து, 2008 முதல், நாடு முழுவதும் உள்ள அனைத்துபல்கலைக்கழகத்திலும், தொலைதூர கல்வி மூலம் எம்.பில்., மற்றும் பி.எச்டி., பட்டம் வழங்குவது தடை செய்யப்பட்டது. நேரடி பட்டம் : தமிழ்நாடு திறந்தநிலை பல்கலையில், நேரடியாகஎம்.பில்., மற்றும் பி.எச்டி., வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இப்பல்கலையில், தமிழ், ஆங்கிலம், பொருளாதாரம், உளவியல், கல்வியியல், குற்றவியல் உள்ளிட்ட, 14 துறைகளில், ஆய்வு படிப்புகள் துவங்கப்படுகின்றன. ஆண்டு கட்டணம், 5,000 ரூபாய். இதற்கான விண்ணப்ப வினியோகம் துவங்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க கடைசி நாள் அக்டோபர், 5ம் தேதி.

3 comments:

  1. Who are all eligible ?

    ReplyDelete
  2. Can Govt.school teachers do m Phil?
    Whether the given courses are regular or part time?

    ReplyDelete
  3. Open university ahh direct phd ahh

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி