பகுதி நேர ஆசிரியர்களுக்கு செப்டம்பர் சம்பளம் குறைப்பு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 21, 2013

பகுதி நேர ஆசிரியர்களுக்கு செப்டம்பர் சம்பளம் குறைப்பு.

பகுதி நேர ஆசிரியர்களை, "காலாண்டு தேர்வு விடுமுறையில் பள்ளிக்கு வரவேண்டாம்,' என்ற வாய்மொழி உத்தரவால்,
செப்டம்பரில் 25 சதவீதம் சம்பளம் "கட்' டாகும், என்ற கலக்கத்தில் உள்ளனர். அனைவருக்கும் கல்வி திட்டத்தில், ஓவியம், உடற்கல்வி, கணினி, இசை, தையல், விவசாயம், கட்டடக் கலை உள்ளிட்ட பாடங்களுக்கு, பகுதி நேர ஆசிரியர்கள் பாடம் நடத்தி வருகின்றனர். மாதம் 12 அரை நாட்கள் பணியாற்றுகின்றனர். இவர்களுக்கு தொகுப்பூதியமாக, 5000 ரூபாய் சம்பளம் வழங்கப்படுகிறது.காலாண்டு, அரையாண்டு தேர்வு விடுமுறை காலங்களில், சிறப்பு வகுப்புக்கள் எடுக்கலாம் என, அரசாணையில் கூறப்பட்டுள்ளது. இதனடிப்படையில், கடந்த காலங்களில் பணிக்கு வந்துள்ளனர். தற்போது நடந்து வரும் காலாண்டு தேர்வு செப்., 21ல் முடிவடைகிறது. தேர்வு விடுமுறைக்கு பின், அக்., 3 ல் மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும். காலாண்டு தேர்வு விடுமுறையில், பகுதி நேர ஆசிரியர்கள், பணிக்கு வர வேண்டாம், என வட்டார வள மைய அலுவலக ஒருங்கிணைப்பாளர்கள் வாய்மொழியாக உத்தரவிட்டுள்ளனர்.இதனால், 12 அரை நாட்களுக்கு பதிலாக, 9 அரை நாட்கள் பணிக்காலமாக கணக்கிடப்பட்டு, 5000 ரூபாய் சம்பளத்தில்1,300 ரூபாய் குறைவாக கிடைக்கும். இந்த உத்தரவால், பகுதிநேர ஆசிரியர்கள் கலக்கத்தில் உள்ளனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி