இடைநிலை ஆசிரியர்கள் தங்களின் தற்போதைய தேவை என்ன? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 16, 2013

இடைநிலை ஆசிரியர்கள் தங்களின் தற்போதைய தேவை என்ன?

இயக்கம் போராடி பல்வேறு நிலைகளில் ஆசிரியர்களின் தரத்தை உயர்த்திய போதிலும் கடந்த, 2002 முதல் ஆசிரியர்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளானார்கள்.2003 ல் நிதித்துறைஅரசாணை 259 நாள் 06/08/2003 இன் படி
பங்கேற்பு ஓய்வூதியம் 01/04/2003 க்கு பின் பணிநியமனம் பெற்றவர்களுக்கு கட்டாயமாக்கப்பட்டது.01/04/2003 க்கு பின் பணி நியமனம் பெற்றவர்கள் தொகுப்பூதியத்திலேயே நியமிக்கப்பட்டனர்.சம்பளம் ரூ3000/- மட்டும். தொகுப்பூதிய காலத்தை முறையான நியமன காலமாக மாற்ற நீதிமன்றம் செல்ல மாட்டோம் என்ற கட்டாய ஒப்பந்தம் வேறு. இந்த நிலை, பள்ளிக்கல்வி அரசாணை 99 நாள்.27/06/2006 இன் படி ஒரே நாளில் மாற்றப்பட்டு அனைவருக்கும் உடனடி பணிவரன்முறை அதோடு இனி தொகுபூதியம் இல்லை என்று உத்திரவாதமும் வழங்கப்பட்டது. ஆனாலும் , பின்னடைவு.எப்போது?,எப்படி?.ஆறாவது ஊதியக்குழுவந்த போதே பின்னடைவும் வந்துவிட்டது. இதுவரை எந்த ஊதியக்குழுவிலும் ஏற்படாத , முரண்பாடுகளின் மொத்த உருவமாக ஆறாவது ஊதியக்குழு வெளியானது.
(தொடரும்) குன்வர்

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி