தனியார் பள்ளிகளை அரசுடமையாக்க வலியுறுத்தி போராட்டம். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 26, 2013

தனியார் பள்ளிகளை அரசுடமையாக்க வலியுறுத்தி போராட்டம்.

தஞ்சாவூர் மெட்ரிக்குலேஷன் பள்ளி ஆய்வாளர் அலுவலகம் முன் கல்வி உரிமைச் சட்டத்தை அமல்படுத்தாத தனியார் பள்ளிகளை அரசுடமையாக்க வலியுறுத்தி நேற்று முற்றுகை போராட்டம் நடத்த முயன்ற
தமிழக மக்கள் ஜனநாயக கட்சியைச் சேர்ந்த 120 பேர் கைது செய்யப்பட்டனர்.மத்திய அரசின் இலவச கட்டாய கல்வி உரிமைச் சட்டப்படி தனியார் மெட்ரிக்குலேஷன் பள்ளிகளில் 25 சதவீத இடங்களை ஏழை மாணவர்களுக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும்.இந்தாண்டு தமிழகத்தில் அமல்படுத்தப்பட்ட இந்தச் சட்டம் எந்த கல்வி நிலையத்திலும் செயல்படுத்தப்பட வில்லை. இந்தச் சட்டப்படி 25 சதவீத இலவச இடங்களை ஒதுக்காத தனியார் பள்ளிகளை அரசுடமையாக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி, தஞ்சாவூர் சோழன் சிலை அருகே நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு கட்சி தலைவர் சரீப் தலைமை வகித்தார்.தொடர்ந்து, மேம்பாலம் அருகேயுள்ள மெட்ரிக்குலேஷன் பள்ளி ஆய்வாளர் அலுவலகத்தை முற்றுகையிடுவதற்காக ஊர்வலமாக புறப்பட்ட 120 பேரை போலீஸார் கைது செய்தனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி