தகுதி, பணி மூப்பு இருந்தும் பதவி உயர்வுக்காக ஆசிரியர்கள் தவிப்பு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 30, 2013

தகுதி, பணி மூப்பு இருந்தும் பதவி உயர்வுக்காக ஆசிரியர்கள் தவிப்பு.

போதிய தகுதி, பணி மூப்பு இருந்தும் பதவி உயர்வு,தேர்வு புறக்கணிப்பு, பணப்பலனின்றி 6,875 ஆசிரியர்கள் தவிக்கின்றனர். தமிழகத்தில், கடந்த 2003-04 கல்வி ஆண்டில் டி.ஆர்.பி., மூலம், தொகுப்பூதிய
அடிப்படையில், பட்டதாரி 5,377 முதுநிலை பட்டதாரி 1,498 உட்பட இடைநிலை ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர்.2006 ஜூனில் பணி நிரந்தரமாகினர். தொகுப்பூதியத்தில், இருந்த 2 ஆண்டுகளை "சர்வீஸ் ' பட்டியலில் சேர்க்காமல், 10 ஆண்டுகள் பணி முடிக்கவில்லை என்ற காரணத்தை கூறி, தேர்வுநிலை (செலக்ஷன் கிரேடு) பதவி உயர்வு வழங்க மறுக்கின்றனர். இதனால், தேர்வு கண்காணிப்பாளர், துறை அலுவலர் பணிகள் வழங்காமல் புறக்கணிக்கப்படுவதாக, பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர். பட்டதாரி ஆசிரியர் கழக நிர்வாகி சூசை கூறுகையில்,"" 2005-06ல் இடைநிலை ஆசிரியராகி, பதவி உயர்வு மூலம் முன்னிலையில் உள்ளனர். உரிய தகுதி, பணி மூப்பு இருந்தும், 2ஆண்டுகள் தொகுப்பூதிய காலத்தை அரசு சேர்க்காமல் விட்டதால், பதவி உயர்வு கேள்விகுறியானது. பங்களிப்பு பென்ஷனிலும், பாதிக்கப்பட்டு, பதவி உயர்வு, பணப்பலன்களை இழந்து வருகிறோம்,'' என்றார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி