ஐகோர்ட் தீர்ப்பை அமல்படுத்த ஆசிரியர் சங்கம் வலியுறுத்தல். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 22, 2013

ஐகோர்ட் தீர்ப்பை அமல்படுத்த ஆசிரியர் சங்கம் வலியுறுத்தல்.

சென்னை,உயர் நீதிமன்ற தீர்ப்பின்படி, 70பேரை,பதிவு மூப்பு அடிப்படையில்,பட்டதாரி ஆசிரியராக பணி நியமனம் செய்ய,
தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பதிவு மூப்பு பட்டதாரி ஆசிரியர் சங்கம் வலியுறுத்தி உள்ளது.சங்கத்தின் தலைவர் அன்பரசு,நிருபர்களிடம் கூறியதாவது:
முந்தைய தி.மு.க.,ஆட்சியில்,பதிவு மூப்பு அடிப்படையில்,ஆசிரியர் நியமனம் செய்யப்பட்டனர்.2010,ஆக., 23ம் தேதிக்கு முன்,பட்டதாரி ஆசிரியர் பணிக்காக,சான்றிதழ் சரிபார்ப்பு செய்யப்பட்டது. இதில்,தகுதி வாய்ந்த, 70 பேர் விடுபட்டுவிட்டனர். இலவச மற்றும் கட்டாய கல்வி சட்டத்தை காரணம் காட்டி, '70 பேருக்கும் பணி வழங்க முடியாது'என,தமிழக அரசு தெரிவித்தது. இது தொடர்பாக,சென்னை உயர் நீதிமன்றத்தில் நடந்து வந்த வழக்கில்,ஜூலை, 9ம் தேதி தீர்ப்பு வந்தது. டி.இ.டி.,தேர்வு முறை,மேற்கண்ட தேதிக்கு முன்,சான்றிதழ் சரிபார்ப்பு செய்தவர்களுக்கு பொருந்தாது எனவும்,அவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் எனவும்,உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை,காலம் தாழ்த்தாமல் அமல்படுத்த,தமிழக அரசு முன்வர வேண்டும். இவ்வாறு,அவர் கூறினார்.

1 comment:

  1. The members of TRB don't have eligibility to select the candidate.I don't know then why tet and trb are conducting.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி