தொழில் வரியை உயர்த்த நகராட்சிகளுக்கு அனுமதி. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 18, 2013

தொழில் வரியை உயர்த்த நகராட்சிகளுக்கு அனுமதி.

நகராட்சிகளில் தொழில்வரியை உயர்த்திக் கொள்ள, தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. நகராட்சிகளில் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை, வரிசீராய்வு மேற்கொள்ளப் படும். கடந்த, 2008 ஏப்., 1 க்கு பிறகு, 2013 ஏப்., 1ல் வரி
மறு சீராய்வு செய்யப்பட்டிருக்க வேண்டும். ஆனால், லோக்சபா தேர்தலை மனதில் கொண்டு, தமிழக அரசு வரி மறு சீராய்வை அனுமதிக்கவில்லை.இந்நிலையில், நகராட்சிகளின் நிதி நிலை மோசமாக உள்ளதால், வரியை உயர்த்த வேண்டிய நிர்ப்பந்தம், அரசுக்கு ஏற்பட்டுள்ளது. சொத்துவரி, குடிநீர் கட்டணத்தை உயர்த்தினால், அது பொதுமக்களை நேரடியாக பாதிக்கும். எனவே, வர்த்தகர்களை மட்டுமே பாதிக்கும், தொழில் வரியை 5 சதவீதம் உயர்த்திக் கொள்ள அரசு உத்தரவிட்டுள்ளது. அனைத்து வரியினங்களையும் உயர்த்தினால் தான், நகராட்சிகளில் நிதி நிலை ஆரோக்கியமாக இருக்கும். இல்லையென்றால், அரசை எதிர்பார்த்து காத்திருக்க வேண்டும்,என நகராட்சி அதிகாரிகள் கூறுகின்றனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி