மாற்றுத் திறனாளி மாணவர்கள் தொடர்ந்து போராட்டம். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 23, 2013

மாற்றுத் திறனாளி மாணவர்கள் தொடர்ந்து போராட்டம்.

பட்டதாரி ஆசிரியர் நியமனத்தில் இட ஒதுக்கீடு கோரி மாற்று திறனாளி மாணவர்கள் நேற்று ஏழாவது நாளாக
போரட்டம் நடத்தினர். இந்த போராட்டம் பெரும் கைகலப்பாக மாறியது.பட்டதாரி ஆசிரியர் நியமனத்தில் இட ஒதுக்கீடு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாற்று திறனாளிகள் போராடி வருகின்றனர்.இதற்காக நேற்று காலை ராஜிவ் காந்தி சாலை மத்திய கைலாஷில் பேராட்டம் நடுத்துவதாக திட்டமிட்டனர். இதனால், இந்தப்பகுதியில் 250 போலீசார் வரை குவிக்கப்பட்டனர். பின்னர், கோட்டுர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்திற்குள் 30க்கும் மேற்பட்ட மாற்று திறனாளிகள் நுழைந்தனர்.பின்னர், கோட்டூர்புரம் சாலையிலும் அமர்ந்தனர். இதனால், அந்தப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனை சற்றும் எதிர்பார்க்காத காவல்துறையினர் சிறிது நேரம் கழித்து கோட்டூர்புரம் நூலகத்திற்குள் நுழைந்தனர். மாற்று திறனாளிகளை பலவந்தமாக பிடித்து போலீஸ் பேருந்தில் ஏற்றினர். இதில் போலீசார்மாற்று திறனாளிகள் இடையே கைகலப்பு ஏற்பட்டது. பேரூந்து உள்ளே திணிக்கப்பட்ட சிலர், ஓட்டுநர் இருக்கையின் அருகில் சென்று, அங்கிருந்த ஒயர்களை அறுத்துவிட்டனர்.இதனால், பேரூந்து ஸ்டார்ட் ஆகவில்லை. இதற்கிடையில் கைது செய்யப்பட்ட மாணவர்களுக்கும் பேரூந்தை திறந்து வெளியே வர முயற்சித்தனர். இதனால், பெரும் பதட்டமடைந்த போலீசார் ஒருவழியாக பேரூந்தை தள்ளி ஸ்டார்ட் செய்தனர். கைது செய்யப்பட்ட அனைவரும், கோட்டுர்புரம் சமுகக் கூடத்தில் தங்கவைக்கப்பட்டு பின்னர், விடுவிக்கப்பட்டனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி