அரசு பள்ளிகளில் சிபாரிசு அடிப்படையில் வேலை: சி.பி.ஐ. விசாரிக்க கோரி ஐகோர்ட்டில் வழக்கு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 17, 2013

அரசு பள்ளிகளில் சிபாரிசு அடிப்படையில் வேலை: சி.பி.ஐ. விசாரிக்க கோரி ஐகோர்ட்டில் வழக்கு.

அரசு பள்ளிகளில் சிபாரிசு அடிப்படையில் வேலை வழங்கப்பட்டது தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை கேட்டு நேற்று ஐகோர்ட்டில் மாற்றுத்திறனாளி வழக்கு தொடர்ந்தார்
.அரசு பள்ளிகளில் காவலாளி, துப்புரவு பணியாளர் போன்ற பணியிடங்கள் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் போன்றோரின் சிபாரிசினால் நிரப்பப்பட்டதாக கூறப்பட்டது.இது குறித்து திருப்பரங்குன்றத்தை சேர்ந்த மாற்றுத் திறனாளி கணேசன் ஒரு மனுத்தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த ஐகோர்ட்டு, பரிந்துரையின் பேரில் நியமிக்கப்பட்டபணி நியமனங்களை ரத்து செய்ய வேண்டும். இது குறித்து விசாரிக்க அதிகாரி நியமிக்க வேண்டும் என உத்தரவிட்டது.இதற்கு பதில் மனு தாக்கல் செய்த அரசு பள்ளிக்கல்வித்துறை இயக்குனரை கொண்டு விசாரணை நடத்தப்படும் என தெரிவித்தது. ஆனால் இதனை ஏற்க மனுத்த ஐகோர்ட்டு நீதிபதிகள் ஐ.ஏ.எஸ். அதிகாரி ஒருவரை விசாரணை அதிகாரியாக நியமிக்க வேண்டும். மேலும் யாரை நியமிக்கிறீர்கள் என்ற தகவலை கோர்ட்டில் தெரிவிக்க வேண்டும் என உத்தரவிட்டனர்.
சி.பி.சி. விசாரணை:
இந்த நிலையில் மாற்றுத் திறனாளி கணேசன் ஐகோர்ட்டு கிளையில் ஒரு மனுத்தாக்கல் செய்துள்ளார். அதில் அரசு பள்ளி களில் காவலாளி, துப்புரவு தொழிலாளி நியமனம் குறித்துசி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.மேலும் இந்த வழக்கு சம்பந்தமாக உண்மையை மறைத்து ஐகோர்ட்டில் பதில் மனு தாக்கல் செய்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்து உத்தரவிட வேண்டும் என்றும் மனுவில் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி