கோர்ட்டு அவமதிப்பு வழக்கில் பள்ளி கல்வித்துறை செயலாளர் நேரில் ஆஜராக ஐகோர்ட்டு உத்தரவு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 17, 2013

கோர்ட்டு அவமதிப்பு வழக்கில் பள்ளி கல்வித்துறை செயலாளர் நேரில் ஆஜராக ஐகோர்ட்டு உத்தரவு.

கோர்ட்டு அவமதிப்பு வழக்கில் பள்ளி கல்வித்துறை செயலாளர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க மதுரை ஐகோர்ட்டுஉத்தரவிட்டுள்ளது.
தகுதித்தேர்வு
ராமநாதபுரம் மாவட்டம் பாம்பனை சேர்ந்தவர் திவ்யா.
இவர்,பள்ளி கல்வித்துறை செயலாளர்,ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர்ஆகியோர் மீது கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தொடர்ந்துள்ளார்.
அதில் கூறி இருப்பதாவது:–
நான்,பி.ஏ தகவல் தொடர்பு ஆங்கிலம் படிப்பு முடித்து பி.எட் படித்துள்ளேன். கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய தகுதித்தேர்வில் கலந்து கொண்டு தேர்வு எழுதினேன். 93 மதிப்பெண்கள் பெற்று தேர்வு பெற்றேன். எனது சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்ட நிலையில் எனக்கு பணி நியமன உத்தரவு வழங்கப்படவில்லை.
தண்டிக்க வேண்டும்
காரணம் கேட்டபோது,பி.ஏ தகவல் தொடர்பு ஆங்கிலம்,பி.ஏ ஆங்கில இலக்கியத்துக்கு இணையானது அல்ல என்றும்,இதன் காரணமாகவே எனக்கு வேலை வழங்கப்படவில்லை என்றும் தெரிவித்தனர்.27.11.2012 அன்று பி.ஏ தகவல் தொடர்பு ஆங்கிலம்,பி.ஏ ஆங்கில இலக்கியத்துக்கு இணையானது என்று அரசு உத்தரவிட்டுள்ளது. இதன் அடிப்படையில் எனக்கு வேலை வழங்க வேண்டும் என்று ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தேன். வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு,எனக்கு வேலை வழங்க 21.1.2013 அன்று உத்தரவிட்டது. இருந்தபோதிலும் எனக்கு ஆசிரியர் பணி வழங்கப்படவில்லை.எனவே,கோர்ட்டு உத்தரவை அமல்படுத்தாத பள்ளி கல்வித்துறை செயலாளர்,ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் ஆகியோரை கோர்ட்டு அவமதிப்பின் கீழ் தண்டிக்க வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.நேரில் ஆஜராக உத்தரவுஇந்த மனு நீதிபதி எஸ்.நாகமுத்து முன்னிலையில் விசாரணைக்குவந்தது. மனுதாரர் சார்பில் வக்கீல் சண்முகராஜா சேதுபதி ஆஜராகி வாதாடினார்.மனுவை விசாரித்த நீதிபதி,இந்த வழக்கு சம்பந்தமாக பள்ளி கல்வித்துறை செயலாளர்,ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் ஆகியோர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி உத்தரவிட்டார்.

4 comments:

  1. WE all so in same problem ..but my major subject is botany ..till trb didn't give any positive response ...by m.chinna491@gmail.com ...please give us correct solution any one for next step ..

    ReplyDelete
  2. ரிசல்ட் எப்ப வரும் தெரிந்தவங்க சொல்லுங்களே ப்ளீஸ்

    ReplyDelete
  3. result december kulla varum

    ReplyDelete
  4. Vella koduthangalla illiya?

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி