பள்ளிகளுக்கு இயக்குனரகம் சுற்றறிக்கை பாலிதீன் பைகளுக்குபதிலாக காகித பைகளை பயன்படுத்துங்கள் மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த ஆசிரியர்களுக்கு உத்தரவு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 18, 2013

பள்ளிகளுக்கு இயக்குனரகம் சுற்றறிக்கை பாலிதீன் பைகளுக்குபதிலாக காகித பைகளை பயன்படுத்துங்கள் மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த ஆசிரியர்களுக்கு உத்தரவு.

பாலிதீன் பைகளுக்கு பதிலாக காகித பைகளை பயன்படுத்தும்படி மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த பள்ளிகளுக்கு பள்ளிக்கல்வி இயக்குனர் ராமேஸ்வர முருகன்
உத்தரவிட்டுள்ளார்.பள்ளிக்கல்வித்துறை சார்பில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை விடப்பட்டுள்ளது. அதில் இயக்குனர் வி.சி.ராமேஸ்வர முருகன்கூறியிருப்பதாவது:-பிறருக்கு உதவும் மனப்பான்மைமாணவர்களிடத்தில் அன்பு,ஆதரவு,உதவும் மனப்பான்மை,சேவைமனப்பான்மை ஆகிய நற்பண்புகளை வளர்க்க அனைத்து பள்ளிகளிலும் அக்டோபர் மாதம் 2-ந்தேதி முதல் 8-ந்தேதிவரை ஒருவாரம் மகிழ்ச்சி தரும் வாரமாக கொண்டாடுங்கள்.மாணவர்கள் தங்களின் மனதை கவர்ந்த ஆசிரியர்களின் பணியினை பாராட்டி நன்றி பெருக்கோடு சிறு கட்டுரை வரையலாம்.இல்லாதவர்களுக்கு இயலாதவர்களுக்கு இயன்ற பரிசுப்பொருட்களைமாணவர்கள் கொடுத்து உதவலாம். எழுதப்படிக்க தெரியாதவர்களுக்கு எழுத படிக்க சொல்லிக்கொடுக்கலாம். பயன்தரும் செய்திகளை,படிக்கத்தெரியாதவர்களுக்கு படித்து காட்டிடலாம்.மாணவர்கள் தனது சுய முயற்சியில் ஏதாவது ஒரு கைவினை பொருட்களை உருவாக்கி மற்றவர்களுக்கு வழங்கிட செய்யலாம்.போக்குவரத்து நெரிசல் உள்ள இடங்களில் சாலையை கடக்க முடியாமல் சிரமப்படுபவர்களுக்கு சாலையை கடக்க உதவி செய்யலாம்.பாலிதீன் பைகள்பாலிதீன் பைகளின் தீமை பற்றி எடுத்துரைத்து,பாலிதீன் பைகளை பயன்படுத்தாமல் அதற்கு பதிலாக பழைய காகிதப்பைகளை பயன்படுத்தலாம்.பெற்றோர்களுக்கு அன்றாட வேலைகளில் உதவி செய்யலாம்.முதியவர்களுக்கு பத்திரிகை வாசித்து காட்டலாம்.இப்படிப்பட்ட செயல்களில் மாணவர்களை ஈடுபடுத்த வேண்டும் என்று ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.இவ்வாறு பள்ளிக்கல்வி இயக்குனர் வி.சி.ராமேஸ்வர முருகன் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி