போலீஸ் கண்காணிப்பில் ஆசிரியர்கள். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 19, 2013

போலீஸ் கண்காணிப்பில் ஆசிரியர்கள்.

மதுரை உட்பட அனைத்து மாவட்டங்களிலும் தொடக்கப் பள்ளி ஆசிரியர்களை, போலீசார் கண்காணிக்கின்றனர். மத்திய அரசு இடைநிலை ஆசிரியர் களுக்கு இணையாக மாநில இடைநிலை
ஆசிரியர்களுக்கும் சம்பளம் வழங்க வேண்டும் என, தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் பல ஆண்டுகளாக வலியுறுத்துகின்றனர்.இதுகுறித்து மாவட்ட அளவில் பல போராட்டங்களை நடத்தினர். இதன்தொடர்ச்சியாக செப்., 25ல், சென்னையில் மறியல் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் பங்கேற்க, பலமாவட்டங்களில் இருந்து வாகனங்களில், சென்னை செல்ல ஆசிரியர்கள் முடிவு செய்திருந்தனர். அதே நேரம், மறியலில் பங்கேற்க தயாராகும் ஆசிரியர்களை, சென்னைக்குள் நுழைய விடாமல், அந்தந்த மாவட்டங்களில் முதல்நாள் தடுத்து நிறுத்தபோலீசாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால், சங்க நிர்வாகிகளை கண்காணிக்கும் பணியில் தற்போது போலீசார் ஈடுபட்டு உள்ளனர்.ஆசிரியர் சங்க நிர்வாகி ஒருவர் கூறியதாவது: சென்னையில் செப்.,25 மறியல் போராட்டத்திற்கு செல்ல பஸ்களில் மொத்தமாக "டிக்கெட்'கள் முன்பதிவு செய்திருந்தோம். ஏதோ காரணத்திற்காக அனைத்து முன்பதிவையும் பஸ் கம்பெனிகள் திடீரென ரத்து செய்து விட்டன. போலீஸ் கண்காணிப்பையும் மீறி, மறியலில் பங்கேற்போம், என்றார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி