மாணவர்களுக்கான கேரம் போட்டி பங்கேற்க பள்ளிகளுக்கு அழைப்பு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 26, 2013

மாணவர்களுக்கான கேரம் போட்டி பங்கேற்க பள்ளிகளுக்கு அழைப்பு.

ஒன்று முதல் ப்ளஸ் 2 வரை பயிலும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இளநிலை மற்றும் முதுநிலை பிரிவுகளில் மாவட்டஅளவிலான கேரம் விளையாட்டு போட்டிகள் நடக்க உள்ளது.தமிழ்நாடு விளையாட்டு
மேம்பாட்டு ஆணையத்தின், ஈரோடு மாவட்டவிளையாட்டு பிரிவு சார்பில், மாவட்ட அளவிலான கேரம் விளையாட்டு போட்டிகள், ஈரோடு வ.உ.சி., பூங்கா விளையாட்டு அரங்கில் வரும், நான்காம் தேதி காலை, 8.30 மணிக்கு நடக்கிறது.இளநிலை பிரிவில், ஒன்று முதல், ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகள், ஆறு முதல் ப்ளஸ் 2 வகுப்பு வரை பயில்வோர், முதுநிலை பிரிவில் பங்கேற்கலாம். இளநிலை பிரிவில் ஒற்றையர் போட்டியில் முதலிடத்துக்கு, ஆயிரம் ரூபாய், இரண்டாம் இடத்துக்கு, 500, மூன்றாமிடத்துக்கு, 250 ரூபாய் வழங்கப்படும்.இரட்டையர் பிரிவில், முதலிடத்துக்கு, 2,000 ரூபாய், இரண்டாம் இடத்துக்கு, 1,000, மூன்றாமிடம் பெறுபவருக்கு, 500 ரூபாயும் வழங்கப்படும். முதுநிலை ஒற்றையர் பிரிவில், முதலிடத்துக்குஇரண்டாயிரம், இரண்டாமிடத்துக்கு, ஆயிரம், மூன்றாமிடம் பெறுபவருக்கு, 500 ரூபாய் வழங்கப்படும். இரட்டையர் பிரிவில் முதலிடத்துக்கு, நான்காயிரம், இரண்டாமிடம் இரண்டாயிரம், மூன்றாமிடம் பெறுபவருக்கு ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்.முதுநிலை பிரிவில், ஒற்றையர் பிரிவில், ஒரு பள்ளியில் இருந்து, இரண்டு வீரர்கள் மட்டுமே கலந்து கொள்ளலாம். இரட்டையர் பிரிவில், பள்ளி ஒரு குழுவை மட்டுமே அனுமதிக்க வேண்டும். இளநிலை ஒற்றையர் பிரிவில் ஒரு பள்ளிக்கு, இரண்டு வீரர்களும், இரட்டையர் பிரிவில் பள்ளி ஒரு குழுவை மட்டுமே அனுமதிக்க வேண்டும். ஒரு போட்டியில் ஒரு வீரர் மட்டும் கலந்து கொள்ள முடியும்.பள்ளி தலைமை ஆசிரியர், முதல்வர்களிடம் இருந்து வயது சான்றிதழ்களை பெற்று வர வேண்டும், என்று மாவட்ட விளையாட்டு அலுவலர் கனகராஜ் கேட்டு கொண்டுள்ளார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி