முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான தேர்வு முடிவு விரைவில் வெளியீடு ஆசிரியர் தேர்வு வாரியம் ஏற்பாடு-தினத்தந்தியின் குழப்பமான செய்தி. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 16, 2013

முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான தேர்வு முடிவு விரைவில் வெளியீடு ஆசிரியர் தேர்வு வாரியம் ஏற்பாடு-தினத்தந்தியின் குழப்பமான செய்தி.

முதுகலை பட்டதாரி ஆசிரியர்களை நியமிப்பதற்கான தேர்வு முடிவு மிக விரைவில் வெளியிடப்படுகிறது. அடுத்த 10 நாட்களுக்குள் வெளியிட ஆசிரியர் தேர்வு வாரியம் ஏற்பாடு செய்து வருகிறது.8 லட்சத்து 50 ஆயிரம் பேர் தமிழ்நாட்டில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளிகளில் உள்ள முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் போட்டித்தேர்வு நடத்தப்பட்டது.

இந்த தேர்வு முடிவுகள்மிக விரைவில் வெளியிடப்பட உள்ளது.தமிழ்நாடு முழுவதும் உள்ள இடைநிலை ஆசிரியர்கள் காலிப்பணியிடங்களை நிரப்பவும், பட்டதாரி ஆசிரியர்களின் காலிப்பணியிடங்களை நிரப்பவும் அரசு முடிவு செய்து அதற்கான ஆசிரியர் தகுதித்தேர்வை நடத்தியது. இந்த தேர்வை 8 லட்சத்து 50 ஆயிரம் பேர் எழுதினார்கள்.

10 நாட்களுக்குள் வெளியீடு:

இந்த தேர்வு விடைத்தாள்கள் அனைத்தும், ஸ்கேன் செய்யப்படும் பணிமுடிவடைந்தது. மேலும், கம்ப்யூட்டர்களில் நிபுணத்துவம் வாய்ந்தகுழு வரவழைக்கப்பட்டு இந்த விடைத்தாள்கள் மதிப்பீடு செய்யப்பட உள்ளது. இந்த மதிப்பீடு 3 மணி நேரத்திற்குள் முடிந்து விடும்.அதன் பின்னர் தேர்ச்சி பெற்றவர்கள் யார்? யார்? என்ற பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் தயாரிக்க உள்ளது. இந்த தேர்வு முடிவு அடுத்த 10 நாட்களுக்குள் வெளியிட ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் விபு நய்யார், உறுப்பினர் செயலாளர் வசுந்தரா தேவி, உறுப்பினர் க.அறிவொளி ஆகியோர் மும்முரமாக பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

(குழப்பமான செய்தியினை வெளியிட்டமைக்கு வருந்துகிறேன்.தற்போது ஜெயா டிவி செய்தியில் முதுகலை பட்டதாரி ஆசிரியர்களை நியமிப்பதற்கான தேர்வு முடிவு 10 நாட்களுக்குள் வெளியிட ஆசிரியர் தேர்வு வாரியம் ஏற்பாடு செய்து வருகிறது-என்ற செய்தி வெளியாகி உள்ளது)

16 comments:

  1. what is this. I think this heading is wrong*

    ReplyDelete
  2. Very well kalvisaithi mattume matra website ahh kaatilum viraivanathu.......
    first first tet exam announce ahh koduthathu kalvisaithi
    latest news ahh update seivathatku valthukkal.........

    ReplyDelete
  3. Very well kalvisaithi mattume matra website ahh kaatilum viraivanathu.......
    first first tet exam announce ahh koduthathu kalvisaithi
    latest news ahh update seivathatku valthukkal.........

    ReplyDelete
  4. What about last week certificate verification finished candidates?

    ReplyDelete
  5. Good news for TET candidates but...it should be clear...the headline is not the correct one pls change it kalvisaithi...

    ReplyDelete
  6. Prabu sir dinathanthi paper la vantha news tha update panni irukararu PG result release coming soon then Next 10 days TET result release ok u see dinathanthi newspaper Chennai edition

    ReplyDelete
    Replies
    1. ok sir. When pg result will come. Any confirm news?

      Delete
  7. PG TRB RESULT EPPA VARUM .PLS TELL ME FRIENDS.MOBILE NUMBER 8925258821.

    ReplyDelete
  8. Happy to hear this news because keeping the pg tam result pending pave the way to lengthen the pg tam result for long time like pg bot last year.

    We pg tam candidates expect mostly the govt & trb wil give better solution for pg tam at madurai hc today & our wish to finalise today or within this week & publish pg tam result along with all pg subjects as flashed in Jaya tv news within 10 days.

    This shows that if court accepts the solution to b given by trb - result wil b in 1 or 2 days or even today.

    If not trb wil follow the directions given by court & re evaluate pg tam once again asper the court instruction & publish all results in quick.

    Anyhow we all need gud news from trb soon.

    ReplyDelete
    Replies
    1. Dear sir,
      No grace marks. next hearing on Wednesday.

      Delete
  9. Anyhow the pg tam problem get solved by trb on sep 18th wed at madurai hc & we expect the pg tam result with all other subjects soon.

    If there is no grace marks few qns with with high errors which makes the candidates unable to identify the ans due to change of meaning wil b finalised to few qns & that few qns wil b marked as star to all series & get evaluated.

    ReplyDelete
    Replies
    1. நல்லதே நடக்கும் !

      Delete
  10. முதுகலை தமிழ் ஆசிரியர் பணிக்கான தேர்வு: எழுத்துப்பிழை உள்ள கேள்விகளுக்கு கருணை மதிப்பெண் வழங்க முடியாது ஆசிரியர் தேர்வு வாரிய செயலாளர் ஐகோர்ட்டில் பதில் மனு
    மதுரை, செப்.17-
    முதுகலை தமிழ் ஆசிரியர் பணிக்கான தேர்வில் எழுத்துப்பிழை உள்ள கேள்விகளுக்கு கருணை மதிப்பெண் வழங்க முடியாது என்று ஆசிரியர் தேர்வு செயலாளர் ஐகோர்ட்டில் பதில் மனு தாக்கல் செய்துள்ளார்.
    முதுகலை ஆசிரியர் பணி
    மதுரை கோ.புதூரை சேர்ந்தவர் விஜயலட்சுமி. இவர், மதுரை ஐகோர்ட்டு கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறி இருந்ததாவது:-
    ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய முதுகலை பட்டதாரி தமிழ் ஆசிரியர் பணிக்கான எழுத்துத்தேர்வில் 47 கேள்விகளில் அச்சுப்பிழை இருந்தது.
    எனவே, அச்சுப்பிழையுடன் கூடிய கேள்விகளுக்கு கருணை மதிப்பெண் வழங்க உத்தரவிட வேண்டும். இந்த கோரிக்கை மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் வரை முதுகலை தமிழ் ஆசிரியர் பணிக்கான தேர்வு முடிவுகளை மட்டும் வெளியிட தடை விதிக்க வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டு இருந்தது.
    இந்த மனுவை ஏற்கனவே விசாரித்த நீதிபதி, இதுபோன்று ஏராளமான எழுத்துப்பிழைகளுடன் கேள்வித்தாள் தயாரித்து இருப்பதற்காக அதிகாரிகள் வெட்கப்பட வேண்டும் என்று கூறி தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத் தலைவர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.
    இந்த நிலையில் நேற்று அந்த வழக்கு நீதிபதி எஸ்.நாகமுத்து முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
    அர்த்தம் மாறும் வகையில் இல்லை
    விசாரணையின் போது ஆசிரியர் தேர்வு வாரிய செயலாளர் வசுந்தராதேவி பதில் மனு தாக்கல் செய்தார். அதில் கூறி இருந்ததாவது:-
    “தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் நடத்தப்படும் தேர்வுகளுக்காக தயாரிக்கப்படும்கேள்விகள் ரிசர்வ் வங்கியின் அங்கீகாரம் பெற்ற அச்சகங்களில் மிகவும் ரகசியமாக தயாரிக்கப்படுகின்றன. அவ்வாறு தயாரிக்கப்படும்கேள்வித்தாள்கள்தேர்வு தினத்தன்று தான் பிரித்துப் பார்க்கப்படும்.அனுபவம் வாய்ந்த ஆசிரியர்களை கொண்டு கேள்வித்தாள் தயாரிக்கப்படுகிறது. அச்சகத்தில் கேள்வித்தாளை உருவாக்கும் போது எழுத்துப்பிழை ஏற்பட்டுள்ளது.
    ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கும், கேள்வித்தாளில் ஏற்பட்டுள்ள எழுத்துப் பிழைக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை. யார் அச்சடிக்கிறார்களோ, அவர்கள் தான் எழுத்துப்பிழைக்கு முழு பொறுப்பாவார்கள். கேள்வித்தாளில் உள்ள எழுத்துப்பிழை சம்பந்தமாக ஆராய 3 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது.கேள்விகளில் எழுத்துப்பிழை இருந்த போதிலும், அதன்காரணமாக கேள்விகளின் அர்த்தம் மாறும் வகையில் இல்லை. புரிந்து கொண்டு எழுதும் அளவுக்கு தான் கேள்விகள் உள்ளன என்று அந்தக்குழு தெரிவித்துள்ளது.
    எனவே, கருணை மதிப்பெண் கொடுக்க முடியாது. முதல் 10 ரேங்குகளை பெற்றவர்களில் 6 பேர் ‘பி’ சீரியல் கொண்ட கேள்வித்தாள் மூலம் தேர்வு எழுதி உள்ளனர். மறுதேர்வு நடத்தப்பட்டால் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்கள் பாதிக்கப்படுவர். எனவே, இந்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்.”
    இவ்வாறு பதில் மனுவில் கூறப்பட்டு இருந்தது.
    கடமை
    அதன் பின்பு விசாரணை நடந்தது. விசாரணையின் போது ஆசிரியர் தேர்வு வாரிய உறுப்பினர் செயலர் அறிவொழி, தங்கம்மாள் ஆகியோர் கோர்ட்டில் ஆஜராகி இருந்தனர். விசாரணையின் போது நடந்த விவாதம் வருமாறு:-
    கூடுதல் அட்வகேட் ஜெனரல்:- பிரிண்டரில் ஏற்பட்ட கோளாறு காரணமாக பிழை ஏற்பட்டுள்ளது.
    நீதிபதி:- பிரிண்டர் கோளாறு காரணமாக பிழை ஏற்பட்டுள்ளது என்று கூறுவது சரியல்ல. ஒரு தேர்வை நடத்தும் போது கேள்வித்தாளில் எந்தவித குளறுபடியும் இல்லாத அளவுக்கு கேள்வித்தாளை தயார் செய்து தேர்வை சரியாக நடத்த வேண்டியது ஆசிரியர் தேர்வு வாரியத் தலைவரின் கடமை. பிரிண்டர் கோளாறு காரணமாக தேர்வு எழுதியவர்கள் பாதிக்கப்படலாமா?.
    அதிருப்தி
    தேர்வு தொடங்கியதும் கேள்வித்தாளில் தவறு இருப்பதை பார்த்து ½ மணி நேரத்துக்குள் அத்தனை தேர்வு மையங்களுக்கும் பிழையை சரி செய்து கொள்ளும்படி அறிவுறுத்தி இருக்கலாமே?. ஏற்கனவே நடத்தப்பட்ட ஆசிரியர் தகுதித் தேர்வில் உள்ள குளறுபடி குறித்து ஐகோர்ட்டின் கவனத்துக்கு கொண்டு வரப்பட்ட போது, ஐகோர்ட்டு தனது கடுமையான அதிருப்தியை தெரிவித்து இருந்தது. இருந்த போதிலும் தொடர்ந்து தவறு நடக்கிறது. ஆசிரியர் தேர்வு வாரியத் தலைவர் நேரில் ஆஜராக இந்த கோர்ட்டு உத்தரவிட்டும் அவர் ஏன் வரவில்லை?
    கூடுதல் அட்வகேட் ஜெனரல்:- முக்கிய வேலை காரணமாக அவரால் வர இயலவில்லை.
    நீதிபதி:- பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்கவே நாங்கள்(நீதிபதிகள்) இங்கு இருக்கிறோம். இது முக்கியமான வேலை இல்லையா?.
    இவ்வாறு விவாதம் நடந்தது.
    அதன்பின்பு, “இந்த வழக்கு சம்பந்தமாக ஆசிரியர் தேர்வு வாரியத் தலைவரின் கருத்தை அறிய இந்த கோர்ட்டு விரும்புகிறது. எனவே, ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் நாளை(18-ந் தேதி) நேரில் ஆஜராக வேண்டும்” என்று நீதிபதி உத்தரவிட்டார்.

    ReplyDelete
  11. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. Idhu ena pudhu kadha....entha court la TET result ku thadai vidhichanga....?

      Delete
  12. கலைஞர் செய்தி சேனலில் flash news போட்டாங்க.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி