தமிழ்ப் பாடத்துக்கு மறுதேர்வு: அரசின் கருத்தைத் தெரிவிக்க நீதிமன்றம் மீண்டும் உத்தரவு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 26, 2013

தமிழ்ப் பாடத்துக்கு மறுதேர்வு: அரசின் கருத்தைத் தெரிவிக்க நீதிமன்றம் மீண்டும் உத்தரவு.

முதுகலை ஆசிரியர் போட்டித் தேர்வில்,எழுத்துப் பிழையான கேள்வித்தாள் இருந்த தமிழ்ப் பாடத்துக்கு மறுதேர்வு நடத்துவது குறித்து மீண்டும் அரசின் கருத்தை அறிந்து தெரிவிக்குமாறு சென்னை
உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.மறுதேர்வு நடத்துவது தொடர்பாக சில யோசனைகளைத் தெரிவித்த நீதிபதி எஸ்.நாகமுத்து,இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.இந்த வழக்கு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது,மறுதேர்வு நடத்துவது குறித்து அரசின் கருத்தை அறிந்து தெரிவிக்குமாறு உத்தரவிட்டிருந்தார். மொத்தம் உள்ள150கேள்விகளில்,பிழையான40கேள்விகளை நீக்கிவிட்டு110மதிப்பெண்களுக்கு மதிப்பீடு செய்வதாக செவ்வாய்க்கிழமை நடந்த விசாரணையின்போது அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த வழக்கில் புதன்கிழமை இறுதி உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.இந்நிலையில்,புதன்கிழமை விசாரணையின்போது மறுதேர்வு நடத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து நீதிபதி கேள்வி எழுப்பினார்.தேர்வு நடத்தப்பட்ட150கேள்விகளில்,பிழையாக உள்ள40கேள்விகளை நீக்கிவிட்டு110மதிப்பெண்களுக்கு மதிப்பீடு செய்வதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம்,பிழையான40கேள்விகளுக்கு சரியான பதிலை அளித்திருப்பவரின் நிலையை எண்ணிப் பார்க்க வேண்டும். இவ் வழக்கில் அளிக்கப்படும் உத்தரவு,தேர்வு எழுதியவர்களில் ஒரு நபருக்குக் கூட பாதிப்பை ஏற்படுத்திவிடக் கூடாது என்பதற்காகவே அதிக முக்கியத்துவம் தரப்படுகிறது.மாற்று கேள்வித்தாள் தயாராக உள்ளது;அதை அச்சிடுவதற்கு4வாரங்கள் ஆகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மறுதேர்வு நடத்தப்படும் நிலையில்,கேள்வித்தாள் அச்சிடுவது,தேர்வு நாள் குறித்து அறிவிப்பு வெளியிடுவது மட்டுமே செய்ய வேண்டியுள்ளது. ஏனெனில்,ஏற்கெனவே நுழைவுச்சீட்டு வழங்கப்பட்டுள்ளது. தேவைப்பட்டால்,தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும்.இப்போதைய சூழலில்110மதிப்பெண்களுக்கு மதிப்பீடு செய்வது என்றாலும்,உடனடியாகச் செய்துவிட முடியாது. அதற்கும் கால அவகாசம் தேவைப்படும்.ஆகவே,மேற்குறிப்பிட்ட தகவல்களைக் கூறி,மறுதேர்வு நடத்துவது குறித்து அரசின் கருத்தை அறிந்து தெரிவிக்குமாறு அரசுத் தரப்புக்கு நீதிபதி உத்தரவிட்டார்.இந்த வழக்கின் விசாரணை திங்கள்கிழமைக்கு (செப்.30)ஒத்தி வைக்கப்பட்டது. விசாரணையின்போது ஆசிரியர் தேர்வு வாரிய உறுப்பினர்கள் அறிவொளி,தங்கமாரி ஆகியோர் ஆஜராகியிருந்தனர்.

8 comments:

  1. pg trb result tha late aguthu.atleast TET
    result avathu publish panalamla..we r waiting...ple publish d result
    quickly..

    ReplyDelete
  2. Karuthu kettu kaalam thalthuvathatku pathil udanadi maru thervu sariyanathu

    ReplyDelete
  3. Karuthu kettu kaalam thalthuvathatku pathil udanadi maru thervu sariyanathu

    ReplyDelete
  4. re exam yendran all subjectkku varuma illai tamil mattum varuma? tell me friends

    ReplyDelete
  5. EPAAD ELA SUBJECTKUM VARUM

    ReplyDelete
  6. RESULT YEPPAVENDUMANALUM POTATTUM, MUTHALLA FINAL KEY ANSWER RELEASE PANNA SOLLUNGA, NUMBA FINAL MARKSI THEINTHUKOLLALAM

    ReplyDelete
  7. No final key bro so you expect result only.

    ReplyDelete
  8. Eludhum vidhiyin kai eludhi eludhi mer sellum...

    Tamil padittha paavatthirku idhai vida perum vedhanai undaa?

    Ilavu kkaattha kiligalaaki vidatheergal..

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி