பள்ளிகளில் பாடம் நடத்தாமல் பொழுதுபோக்கும் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை: அமைச்சர். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 14, 2013

பள்ளிகளில் பாடம் நடத்தாமல் பொழுதுபோக்கும் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை: அமைச்சர்.

பள்ளிகளில் பாடம் நடத்தாமல் பொழுது போக்கும் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆரம்பம் மற்றும் உயர்நிலைப்பள்ளித்துறை அமைச்சர் தற்போதைய கல்வி முறையில் பல்வேறு
மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. அதனை உரிய வகையில் மாணவர்களுக்கு கற்பிக்கவேண்டியது ஆசிரியர்களின் கடமை. ஆசிரியர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் அரசு செய்யும். கல்வித்துறையில் பணியாற்றிய ஒருவர் 40 பதவிகளை வகித்து வந்துள்ளது அரசின் கவனத்திற்கு வந்துள்ளது.இது போன்று எதுவும் நடைபெறாத வகையில் ஒருவருக்கு ஒரு பதவிஎன்ற விதியை பின்படுத்தப்படும். ஆசிரியர்களின் உழைப்பிற்கு ஏற்ற உதியத்தை அரசு வழங்கி வரும் நிலையில், வேறு இடங்களில் கூடுதலாக வேலை பார்க்கும் எண்ணத்தை அவர்கள் கைவிட வேண்டும். மாநிலத்தில் எழுத்தறிவு 66 சதவிகிதத்திலிருந்து 70 சதவிகிதமாக ஆசிரியர்களும் முக்கிய காரணம். ஆசிரியர்கள் பணி இட மாற்றங்களில் சில குழப்பங்கள் ஏற்பட்டுள்ளது என கவனத்திற்கு வந்துள்ளது. இது சரி செய்யப்படும். பள்ளிகளில் தங்கள் பணியினை சிறப்பாக செய்யும் ஆசிரியர்களுக்கு ஊக்கம் அளிக்கும் அரசு, பாடம் நடத்தாமல் பொழுது போக்கும் ஆசிரியர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கும் என்றார். நிகழ்ச்சியில் கல்வித்துறை மூத்த அதிகாரி சீத்தம்மா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
(அமைச்சர் கிம்மனே ரத்னாகர்பெங்களூரு)

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி