கேள்வித்தாள், ‘லீக்’ சர்ச்சையில் சிக்கிய தர்மபுரி மாவட்டம், டி.இ.டி., தேர்வு முடிவில், முதலிடத்தை பிடித்திருப்பதாக, தகவல் வெளியாகி உள்ளது. இந்த விவகாரம் காரணமாகவே, தேர்வு முடிவை வெளியிடுவதில், இழுபறி நிலை ஏற்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 29, 2013

கேள்வித்தாள், ‘லீக்’ சர்ச்சையில் சிக்கிய தர்மபுரி மாவட்டம், டி.இ.டி., தேர்வு முடிவில், முதலிடத்தை பிடித்திருப்பதாக, தகவல் வெளியாகி உள்ளது. இந்த விவகாரம் காரணமாகவே, தேர்வு முடிவை வெளியிடுவதில், இழுபறி நிலை ஏற்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

கேள்வித்தாள் வெளியான சர்ச்சையில் சிக்கிய தர்மபுரி மாவட்டம், டி.இ.டி., தேர்வு முடிவில், முதலிடத்தை பிடித்திருப்பதாக, தகவல் வெளியாகி உள்ளது. இந்த விவகாரம் காரணமாகவே, தேர்வு முடிவை வெளியிடுவதில், இழுபறிநிலை ஏற்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.தமிழகத்தில்,
மூன்றாவது முறையாக, ஆகஸ்ட், 17, 18ம் தேதிகளில், டி.இ.டி., தேர்வுகள் நடந்தன. 11 லட்சம் பேர்,இந்த தேர்வை எழுதினர். விடைத்தாள்கள் அனைத்தும், கம்ப்யூட்டர் மூலம் மதிப்பீடு செய்து முடிக்கப்பட்டு விட்டன. தேர்வு முடிவை, தேர்வர்கள், ஆவலுடன் எதிர்பார்த்துகாத்திருக்கின்றனர். எனினும், தேர்வு முடிவு எப்போது வெளியாகும் என, தெரியாத நிலை, நீடித்து வருகிறது.இதுகுறித்து விசாரித்தாலே, ‘தயாராக உள்ளது; விரைவில் வெளியிடுவோம்’ என்ற பதிலை, அதிகாரிகள் திரும்ப, திரும்ப கூறி வருகின்றனர். கடந்த ஆண்டு நடந்த, இரு டி.இ.டி., தேர்வுகளின் முடிவுகள், மிக விரைவாக வெளியிடப்பட்டன. கடந்தஆண்டு, ஜூலையில் நடந்த தேர்வு முடிவுகள், ஆகஸ்ட் இறுதியில்வெளியிடப்பட்டன.அதேபோல், அக்டோபர், 14ம் தேதி நடந்த இரண்டாவது டி.இ.டி., தேர்வு முடிவுகள், நவம்பர், முதல் வாரத்தில் வெளியிடப்பட்டன. இப்படி, இரு தேர்வுகளின் முடிவுகளை, விரைவாக வெளியிட்ட டி.ஆர்.பி., இந்த முறை, ஒன்றரை மாதம் கடந்த நிலையிலும், அமைதிகாத்து வருவது, தேர்வர் மத்தியில் சந்தேகத்தை கிளப்பி உள்ளது.இந்நிலையில், தேர்வு முடிவில், தர்மபுரி மாவட்ட தேர்வர்கள், முதலிடத்தை பிடித்திருப்பதாகவும், இதன் காரணமாகவே, தேர்வு முடிவை வெளியிடுவதில், டி.ஆர்.பி., காலம் தாழ்த்தி வருவதாகவும், தகவல்கள் வெளியாகி உள்ளன. தேர்வு துவங்குவதற்கு முதல் நாள், கிருஷ்ணகிரி மற்றும் தர்மபுரி மாவட்டங்களில், டி.இ.டி., கேள்வித்தாள், வெளியானதாக, தகவல்கள் வெளியாயின. இதுதொடர்பாக, போலீசார் அதிரடி விசாரணை நடத்தி, கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த,ஆறு பேர் கும்பலை, போலீசார் கைது செய்தனர்.இந்த விவகாரம் தொடர்பாக, பின்னாளில், கைது எண்ணிக்கை, 15ஐ தாண்டியது.கைதான கும்பல்களிடம் இருந்து, 7.4 லட்சம் ரூபாயை, போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும், அவர்களிடம் இருந்து, கேள்வித்தாள்களும் பறிமுதல் செய்யப்பட்டன. எனினும், அதில் இடம்பெற்றிருந்த கேள்விகளும், தேர்வில் கேட்கப்பட்ட கேள்விகளும் ஒன்று அல்லஎன்றும், கைதான கும்பல் வைத்திருந்தது, போலியான கேள்வித்தாள் என்றும், போலீசார் தெரிவித்திருந்தனர்.டி.ஆர்.பி., தலைவர், விபு நய்யாரும், "டி.இ.டி., தேர்வில்,சிறு முறைகேடு கூட நடக்கவில்லை" என தெரிவித்தார். இப்படியிருக்கும் போது, சர்ச்சையில் சிக்கிய தர்மபுரி மாவட்டத்தில், தேர்ச்சி அதிகம் என, தகவல் வெளியாகி இருப்பது, தேர்வர்கள் மத்தியில், புளியை கரைத்துள்ளது. இதுகுறித்து, கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:தர்மபுரி மாவட்டம், அனைத்து வகையிலும், மிகவும் பின்தங்கியமாவட்டம். வேலை வாய்ப்புகள் பெரிய அளவில் இல்லை. இதனால், படித்த இளைஞர்கள், அரசு வேலை வாய்ப்புகளை பெரிதும் நம்பி உள்ளனர். போட்டித் தேர்வுக்கு, கடுமையாக உழைக்கின்றனர். இதனால், பொதுவாகவே, எந்த போட்டித் தேர்வாக இருந்தாலும், தர்மபுரி மாவட்ட இளைஞர்கள், அதிகளவில் தேர்வு பெறுவர். அந்த வகையில், டி.இ.டி., தேர்விலும், அதிகமானோர் தேர்ச்சி பெற்றிருக்கலாம். இதில், தேவையில்லாமல், சந்தேகம் அடைய தேவையில்லை. இவ்வாறு, அந்த அதிகாரி தெரிவித்தார்.

24 comments:

  1. Oh my God this 2distict contain MBC candidate mostly effected MBC candidate

    ReplyDelete
  2. Thagaval perum urimai sattathin moolaam tharmapuri mavattathil
    TET ezhuthiyavargal ethanaiper
    TET ill
    Thertchi petror ethanaiper ena
    kandarinthu
    santhegam padupadiyaana
    seyal nadanthirunthaal
    TET Thervai meendum nadatha arasu munvara vendum

    ReplyDelete
  3. tet Pass percentage enna athuvum low than

    ReplyDelete
  4. Enna santhegam.confirm.unmai ellana arrest pannuvangala.trb mulu poosanikai sotrukkul maraichutanga......

    ReplyDelete
  5. Enna santhegam.confirm.unmai ellana arrest pannuvangala.trb mulu poosanikai sotrukkul maraichutanga......

    ReplyDelete
  6. Enna santhegam.confirm.unmai ellana arrest pannuvangala.trb mulu poosanikai sotrukkul maraichutanga......

    ReplyDelete
  7. Enna santhegam.confirm.unmai ellana arrest pannuvangala.trb mulu poosanikai sotrukkul maraichutanga......

    ReplyDelete
  8. unmai than confirm qution vangirupanga ,enakku therium many number vangirukanga

    ReplyDelete
  9. Therchipetra anaivarukkum pani valanka vendum

    ReplyDelete
  10. There ll be re-exam for TET....official news

    ReplyDelete
    Replies
    1. where did u get this new

      Delete
    2. is there any supplementry exam like last year?

      Delete
  11. MANASU VALIKKUTHU. NANDRA ERUKKATTUM TRB. ENGA PAAVAM SUMMA VIDAADHU

    ReplyDelete
  12. please release the result as soon as poosibe

    ReplyDelete
  13. The Government should esquire about the result in Dharmapuri District. If Dharmapuri Dist candidates are intelligents what about other 31 district candidates? How is it possible to pass 30000 candidates in Dharmapuri alone?

    ReplyDelete
    Replies
    1. What.3000 candidates in dharmapuri alone. Hw is ut possible

      Delete
    2. What total pass pannathe 53,000 athula 30000 dharmapuri la mattuma avalavu arivaligala?

      Delete
  14. intha tet mattum illa last two tet layum question paper out agi irukku

    ReplyDelete
  15. re exam natathuvangala? ithu unmaiya?

    ReplyDelete
  16. More poling. Areavula re election veippanka athupola dharmapuri dis mattum re exam veika

    ReplyDelete
  17. More poling. Areavula re election veippanka athupola dharmapuri dis mattum re exam veika

    ReplyDelete
  18. TNTET 150Qs=8Ls/. Appo PGTRB?
    Great!!!

    ReplyDelete
  19. When's the tet result?
    Let them release it first then only we'll come to know how many Dharampuri cheaters have passed so that we'll get evidence to catch the culprits.

    ReplyDelete
  20. Innum result varala athukula eppadi dharmapuri dis 1st nu
    solranga?

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி