10 மாவட்டங்களில் 19 மகளிர் தங்கும் விடுதிகள் கட்ட உத்தரவு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 21, 2013

10 மாவட்டங்களில் 19 மகளிர் தங்கும் விடுதிகள் கட்ட உத்தரவு.

சென்னையில் ஆறு, காஞ்சிபுரத்தில் மூன்று மற்றும் திருவள்ளூர் உள்ளிட்ட, 10 மாவட்டங்களில் தலா, ஒன்று என, 19 மகளிர் தங்கும்விடுதிகள் கட்ட, முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டு, நிதியும்
ஒதுக்கி உள்ளார்.இதுகுறித்த செய்திக்குறிப்பு:கல்வி பயின்ற பெண்கள், தாங்கள் கற்ற கல்விக்கு ஏற்ற பணிகளை தேடி, வசிக்கும் ஊரில் இருந்து மாநிலத்தின் மற்ற பகுதிகளுக்குச் சென்று பணிபுரிவது அதிகரித்துள்ளது. வெளியூரில் பணியாற்றும் மகளிருக்கு, குறைந்த கட்டணத்தில பாதுகாப்பான தங்குமிடங்கள் தேவைப்படுகின்றன. இதற்காக, சமூக நலத்துறையின் மூலம், சென்னை, இரண்டு உட்பட எட்டு, பணிபுரியும் மகளிருக்கான அரசுவிடுதிகள் செயல்பட்டு வருகின்றன.இதுபோன்ற, பணிபுரியும் மகளிருக்கான அரசு விடுதிகளை, மற்ற பகுதிகளிலும் கட்ட, முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இதன்படி, சென்னையில், ஆறு, காஞ்சிபுரத்தில், மூன்று, திருவள்ளூர், திருப்பூர், கோவை, திருச்சி, நெல்லை. பெரம்பலூர், விழுப்புரம், வேலூர், சிவகங்கை, தஞ்சையில் தலா ஒன்று என, 16 அரசுவிடுதிகள், 1,000 பெண்கள் பயன்பெறும் வகையில், துவக்கப்படுகின்றன.இந்த விடுதிகளில் பணியாற்ற, கண்காணிப்பாளர், சமையலர், இரவு காவலர், துப்புரவாளர் என, எட்டு பணியிடங்களை தோற்றுவிக்கவும், தொடர் மற்றும் தொடரா செலவினமாக, 19 விடுதிகளுக்கு, 4 கோடி ரூபாய், கட்டடம் கட்ட, 19 விடுதிகளுக்கு, 19 கோடி ரூபாய், சொந்த கட்டடம் கட்டும் வரை, வாடகை செலவிற்காக, ஆண்டுக்கு, 46 லட்சம் ரூபாயும் ஒதுக்கி முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி