போலீசாருக்கு பல்வேறு பணிகளில் உதவும் வகையில், 10,500 பேர் கொண்ட, தமிழ்நாடு சிறப்பு காவல் இளைஞர் படை ஒதுக்கப்பட்ட பணிகளுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 22, 2013

போலீசாருக்கு பல்வேறு பணிகளில் உதவும் வகையில், 10,500 பேர் கொண்ட, தமிழ்நாடு சிறப்பு காவல் இளைஞர் படை ஒதுக்கப்பட்ட பணிகளுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

தமிழ்நாடு சிறப்பு காவல் இளைஞர் படையில் தேர்வு  செய்யப்படுபவர்கள், ஏற்கனவே காலியாக உள்ள, ஓட்டுனர், டேட்டா என்ட்ரி ஆப்பரேட்டர், தபால் பணி, குடியிருப்பு பராமரிப்பு மற்றும்
நெடுஞ்சாலை ரோந்துப் பணிகளில் மட்டும் பயன்படுத்தப்பட வேண்டும் என்று, தமிழக அரசு தெரிவித்துள்ளது.சட்டசபையில் அறிவிப்பு : போலீசாருக்கு பல்வேறு பணிகளில் உதவும் வகையில், 10,500 பேர் கொண்ட, தமிழ்நாடு சிறப்பு காவல் இளைஞர் படை ஒன்று உருவாக்கப்படும் என்று, கடந்த ஏப்ரல் மாதம், 23ம் தேதி சட்டசபையில், முதல்வர்ஜெயலலிதா அறிவித்தார். இதையடுத்து, இப்படை தொடர்பான ஒப்புதல் கேட்டு, தமிழக அரசிற்கு, திட்ட அறிக்கையை, டி.ஜி.பி., அளித்தார்.இதை ஏற்ற அரசு, இதற்காக, தமிழக சிறப்பு காவல் இளைஞர் படை சட்டம் என்ற தனி சட்டத்தை, கடந்த, ஜூலை மாதம் கொண்டு வந்தது. இதையடுத்து, இந்த படைக்கான நிர்வாகஅதிகாரிகள் நியமிக்கப்பட்டு, படை வீரர்களுக்கான வயது, கல்வி ஆகியவை அறிவிக்கப்பட்டன. தொடர்ந்து, மாவட்டம்தோறும், தேவைக்கேற்ப, பணியிடங்கள் ஒதுக்கி, அரசிற்கு, தமிழக டி.ஜி.பி., அறிக்கை அளித்தார்.தொடர்ந்து, அவர்களுக்கான சம்பளமாக, மாதம், 7,500 ரூபாய் தொகுப்பூதியம் வழங்குவது, அவர்களுக்கான உடை உள்ளிட்டவை, ஆண்டுக்கு, இரண்டு ஜோடிகள் வழங்குவது தொடர்பாகவும், அறிவிக்கப்பட்டது. இதன்படி, அரை கை காக்கி நிற சட்டை மற்றும் காக்கி நிற பேன்ட், காக்கி நிற வட்ட தொப்பி, கறுப்பு லெதர் ஷூ, சாக்ஸ், விசிலுடன் கூடிய செயின், கறுப்பு லெதர் பெல்ட் ஆகியவை வழங்கப்படுகின்றன.இதையடுத்து, சிறப்பு இளைஞர் படைக்கான ஆட்கள் தேர்வு தொடர்பாக, 96.08 கோடி ரூபாய்க்கான நிர்வாக ஒப்புதல் கேட்டு, டி.ஜி.பி., அரசிற்கு கோரிக்கை விடுத்தார். இதை ஏற்ற தமிழக அரசு, 10,500 இளைஞர்களை தேர்வு செய்ய, தொடரும் மற்றும் தொடரா செலவினங்களுக்காக, 96.08 கோடி ரூபாயை ஒதுக்கி, அரசாணை பிறப்பித்துள்ளது.மேலும், தேர்வு செய்யப்படும் இளைஞர்கள், ஓட்டுனர், டேட்டா என்ட்ரி ஆப்பரேட்டர்கள் மற்றும் தபால் பணிகளுக்காக, ஏற்கனவே உள்ள காலிப்பணியிடங்களுக்குஎதிராக, பயன்படுத்தப்பட வேண்டும். பொதுப்பணித் துறை, தமிழ்நாடு காவலர் வீட்டு வசதிக் கழகத்தால் பராமரிக்கப்படும், காவலர் குடியிருப்புகள் பராமரிப்பு பணிக்கு, பயன்படுத்த வேண்டும். விபத்து மீட்புப் பணி, நெடுஞ்சாலை ரோந்துப் பணிகளில், தேவைக்கேற்ப பயன்படுத்த வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதற்கிடையில், தற்போது, ஏற்கனவே இப்படையில் ஆட்கள் சேர்ப்புக்கான விண்ணப்பங்கள்வினியோகிக்கப்பட்டு, அவை தற்போது, பரிசீலனையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி