கல்லூரிகளில் வசதி மேம்படுத்த ரூ.150 கோடி ஒதுக்கீடு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 21, 2013

கல்லூரிகளில் வசதி மேம்படுத்த ரூ.150 கோடி ஒதுக்கீடு.

அண்ணா பல்கலைக்கழக உறுப்பு பொறியியல் கல்லூரிகளில், உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த, 150 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது.அண்ணா பல்கலைக்கழகத்துடன்
இணைக்கப்பட்ட, கல்லூரிகளின் செயல் பாட்டை கண்காணிக்க,நிர்வாக வசதிக்காக, திருச்சி, கோயம்புத்தூர், திருநெல்வேலி, மதுரை ஆகிய இடங்களில், மண்டல அலுவலகங்கள் அமைக்க, முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டார்.மதுரை, கோயம்புத்தூர் மண்டல அலுவலகங்களுக்கு, கல்வி சார்ந்த கட்டடங்கள் கட்ட, தலா, 30 கோடி ரூபாய்; மதுரை, கோயம்புத்தூர், திருநெல்வேலி மண்டல மையங்களில், மாணவ, மாணவியருக்கான, விடுதி கட்டடங்கள் கட்ட, தலா, 10 கோடி ரூபாய்; திண்டுக்கல், ராமநாதபுரம், தூத்துக்குடி, நாகர்கோவில், ஆகிய இடங்களில் உள்ள, அண்ணா பல்கலைக்கழக உறுப்பு பொறியியல் கல்லூரிகளில், மாணவ, மாணவியர் விடுதி கட்ட, தலா, 10 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது.பட்டுக்கோட்டை மற்றும் பண்ருட்டியில், அண்ணா பல்கலைக்கழக உறுப்பு பொறியியல் கல்லூரிகளில், விடுதி கட்ட, தலா, ரூ.5 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. ஆரணி, காஞ்சிபுரம், விழுப்புரம், திண்டிவனம், தூத்துக்குடி, நாகர்கோவில், ராமநாதபுரம், திண்டுக்கல், பண்ருட்டி, திருக்குவளை, பட்டுக்கோட்டை, அரியலூர், ஆகிய இடங்களில் உள்ள, அண்ணா பல்கலைக்கழக உறுப்பு பொறியியல் கல்லூரிகளில், மின்சாரம், குடிநீர், சுகாதாரம் வசதி ஏற்படுத்த, 10 கோடி ரூபாய் என, மொத்தம் 150 கோடி ரூபாய் மதிப்பில், பல்வேறு உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்த, முதல்வர் ஜெயலலிதா ஒப்புதல் வழங்கி உள்ளார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி