சாதித்துக் காட்டிய பள்ளி மாணவி: 20 ஆண்டுகளுக்கு பின் தேசிய அணியில் தமிழர். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 28, 2013

சாதித்துக் காட்டிய பள்ளி மாணவி: 20 ஆண்டுகளுக்கு பின் தேசிய அணியில் தமிழர்.


20 ஆண்டுகளுக்கு பின் தேசிய கேரம் அணியில் தமிழர் இடம் பெற்ற பெருமையை பெற்றுத் தந்தவர், மதுரை கிருஷ்ணம்மாள் ராமசுப்பையர் பள்ளி மாணவி ஐஸ்வர்யா" என, பாராட்டு விழாவில் பங்கேற்றோர் புகழாரம் சூட்டினர்.அரியானா மாநிலம்
கூர்கானில் நடந்த இந்திய-இலங்கை கேரம் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி சார்பில் பங்கேற்ற மதுரை கிருஷ்ணம்மாள் ராமசுப்பையர் பள்ளி மாணவி ஐஸ்வர்யா சாம்பியன் பட்டம் வென்றார். அவருக்கு மதுரை மாவட்ட கேரம் சங்கம் சார்பில் விக்டோரியா எட்வர்டு மன்றத்தில் பாராட்டு விழா நேற்று நடந்தது.கேரம் சங்கத் தலைவர் லிங்கராஜ் கண்ணன் வரவேற்று பேசுகையில், "20 ஆண்டுகளுக்கு முன் தமிழகத்தின் கோவர்த்தனன் என்பவர் தான் இந்திய அணிக்காக விளையாடினார். 20 ஆண்டுகளுக்கு பின் இந்திய அணியில் ஒரு தமிழர், அதுவும் மதுரையைச் சேர்ந்த ஐஸ்வர்யா பங்கேற்றிருப்பது, மதுரைக்கு பெருமை," என்றார்.கேரம் சங்கத்தின் தலைமைப் புரவலர் இஸ்மாயில் தலைமை வகித்து பேசுகையில்,"ஐஸ்வர்யாவின் வெற்றியில் அவரது பள்ளிக்கும், பயிற்சியாளருக்கும் நிறைய பங்குண்டு. விக்டோரியா எட்வர்டு மன்றம் சார்பில் மாணவிக்கு ரூ.50 ஆயிரம் பரிசு வழங்கப்படும். இன்ஜினியரிங் அல்லது மருத்துவ படிப்பிற்கு அவர் தேர்வாகும்போது, அதற்கான அனைத்து செலவையும் நாங்கள் ஏற்போம்," என்றார்.ரேவிஷ் நிறுவன நிர்வாக இயக்குனர் ஸ்ரீனிவாசன் பேசுகையில், "சுற்றுச்சூழல் சாதகமாக அமைந்தால் வெற்றி நிச்சயம். ஐஸ்வர்யாவிற்கு பள்ளி, பெற்றோர் வகையில் சாதகமான சூழல் அமைந்துள்ளது," என்றார்.தமிழ்நாடு ஒலிம்பிக் சங்க துணைத்தலைவர் சோலைராஜா பேசுகையில், "ஒலிம்பிக் சங்கம்மற்றும் மதுரை அனைத்து விளையாட்டு கூட்டமைப்பு சார்பில், ஐஸ்வர்யாவின் எதிர்காலத்திற்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து தருவோம். ஐஸ்வர்யாவிற்கு தனி பாராட்டு விழா நடத்த உள்ளோம். விளையாட்டுத் துறை அமைச்சர் வழியாக தமிழக முதல்வரின் பாராட்டையும், பரிசையும் மாணவிக்கு பெற்றுத்தருவோம்," என்றார்.மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் பரமேஸ்வரி பேசுகையில், "விளையாட்டில் சாதிக்கும் மாணவர்களுக்கு, தேர்வின் போது மதிப்பெண் வழங்கப்படுகிறது. விளையாட்டால் படிப்புபாதிக்காது, மதிப்பெண் கிடைக்கும் என்பதை பெற்றோர் உணர வேண்டும்," என்றார்.பென் மெட்ரிக் பள்ளி தலைமை ஆசிரியர் கிரிஸ்டபெல் சுசிதா, ரேவிஷ் நிறுவனம் உள்ளிட்ட பலர் மாணவிக்கு பரிசுகள் வழங்கினர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி