இந்திய மருத்துவப் படிப்பு: 2ம் கட்ட கலந்தாய்வு இன்று ஆரம்பம். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 28, 2013

இந்திய மருத்துவப் படிப்பு: 2ம் கட்ட கலந்தாய்வு இன்று ஆரம்பம்.

சித்த மருத்துவப் படிப்புகளுக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு இன்று துவங்குகிறது. "கட் ஆப்" மதிப்பெண் 110 வரை உள்ள மாணவர்கள் அழைக்கப்பட்டுள்ளனர்.தமிழகத்தில் சித்தா,
ஆயுர்வேதம், யுனானி உள்ளிட்ட இந்திய மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு 21ம் தேதி துவங்கி நான்கு நாட்கள் நடந்தது. இதில், பெரும்பாலான இடங்கள் நிரம்பிய நிலையில் 126 இடங்கள் காலியாக உள்ளன. இதற்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு இன்று சென்னை அரும்பாக்கத்தில் உள்ள அண்ணா சித்த மருத்துவக் கல்லூரியில் துவங்குகிறது.இரண்டு நாட்கள் நடக்கும் கலந்தாய்வில், முதல் நாளில் கட் ஆப் மதிப்பெண் 151.75 முதல் 134 வரை பெற்றவர்களும், இரண்டாம் நாளில் 133.75 முதல் 100 மதிப்பெண் வரை பெற்றவர்களும் பங்கேற்கலாம் என, இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை ஆணையரகம் தெரிவித்துள்ளது.மொத்தமுள்ள 126 இடங்களுக்கு 818 பேர் அழைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி