பேராசிரியர்களின் கண்டுபிடிப்பு: மின்சாரம் வீணாவதை தடுக்க "ஸ்டேட் காம்" - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 28, 2013

பேராசிரியர்களின் கண்டுபிடிப்பு: மின்சாரம் வீணாவதை தடுக்க "ஸ்டேட் காம்"

மின் தொகுப்பிலிருந்து வெளி வரும் அதிகமான மின்சார அலைகளை கட்டுபடுத்தி சீரான மின்சாரம் பெற்று தந்து,மின்சாரம் வீணாவதை தடுக்கும் "ஸ்டேட் காம்" எனும் கருவியை
கலசலிங்கம் பல்கலை பேராசிரியர்கள் கண்டு பிடித்துள்ளனர்.கலசலிங்கம் பல்கலை மின்னியல்,மின்னணுவியல் துறை தலைவர் கண்ணன்,பேராசிரியர்கள் பொன்னாயிரம் சுந்தரவேல்,விஜயகுமார் ஆகியோர் கூறியதாவது:"ஸ்டேட் காமை சின்க்ரோனஸ் மோட்டார் டிசி கெப்பாசிடர் பில்டர்,லிங்க் ரியாக்டர்,பொதுகப்ளிங் போன்ற பாகங்களால்,வடிவமைக்கப்பட்டுள்ளது.மின் தொகுப்பிலிருந்து நம் பயன்பாட்டிற்கு வரும் மின்சாரம்,கூடுதல் ஹார்மானிக்ஸ் அலைகளோடு வருகிறது. இதனால் பயன்பாட்டிலுள்ள ஜெனரேட்டர்,மோட்டார் போன்றவற்றில் காயில்கள் எரிந்து விடும். டிரான்ஸ்பார்மரில் வரும் கேபிள் வயர்களிலும்,டிரான்ஸ்பார்மரிலும்,சில சமயம்,அதிக மின் ஓட்டம் ஏற்பட்டு,தீப்பொறிகள் வந்துவிடும்.இதை தடுக்க,இந்த ஸ்டேட்காம் கருவியை மின் தொகுப்பில் (பவர் கிரிட்) பொருத்தினால் மின் தொகுப்பின் அலைகள் ஸ்டேட்காம் ஆல் ஹார்மானிக்ஸ் என்ற தீய விளைவுகளை கட்டுப்படுத்தப்படுகிறது. இதன் மூலம் மின்சாரம் வீணாவதை தடுக்கப்படுகிறது.இவ்வாறு சீராக்கப்பட்ட மின்சாரம் துணை மின் நிலைய டிரான்ஸ்பார்மர்களுக்குஅனுப்பபடுவதால் அந்த டிரான்ஸ்பார்மர்களும் முழு அளவில் பயன்படுத்தப்படுகிறது.மேலும்,இக்கருவியில் குறைந்த அழுத்த மின்சாரம்,அதிக அழுத்த மின்சாரம் போன்ற காரணிகளை அளந்து தெரியப்படுத்தும் கருவியும் இதில் பொருத்தப்பட்டுள்ளதால் வெல்டிங் செய்யும் சாதனம் போன்ற மின் சாதனைகளின் பலவர் பேக்டர்களையும் சமன் செய்து,மின் சிக்கனம் செய்து கொள்ளலாம்" என்றனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி