தமிழகம் உட்பட அனைத்து மாநிலங்களுக்குமான ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் நியமனத்தில், இந்த ஆண்டுக்கான ஒதுக்கீடு அறிவிக்கப்பட்டுள்ளது. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 23, 2013

தமிழகம் உட்பட அனைத்து மாநிலங்களுக்குமான ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் நியமனத்தில், இந்த ஆண்டுக்கான ஒதுக்கீடு அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2012ம் ஆண்டு யு.பி.எஸ்.சி., தேர்வில் சிவில் சர்வீஸ் பணியிடங்களுக்கான முதன்மை தேர்வு மேயிலும், முக்கிய தேர்வு நவம்பரிலும், கடந்த 2013 ஏப்ரலில்
நேர்காணலும், ஜூனில் தேர்வு முடிவும் வெளியிடப்பட்டது. இதையடுத்து இந்திய அளவில் 180 ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள்பணியிடங்கள் காலியாக கண்டறியப்பட்டு, அதற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டனர். இதில் சொந்த மாநிலங்களில் பணியாற்ற 61 பேரும், பிற மாநிலங்களில் பணியாற்ற 119 பேரும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளனர்.தமிழகத்தை பொறுத்தவரை 9 காலியிடங்களுக்கு, சொந்த மாநிலத்தை சேர்ந்த 3 பேரும், பிற மாநிலங்களில் இருந்து 6 பேரும் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் பிற்படுத்தப்பட்டோர் 2 பேர் உள்ளனர். இவர்கள் இருவருமே பிறமாநிலங்களை சேர்ந்தவர்கள். பொதுப் பிரிவில் (ஓ.சி.,) உள்ள 5 பேரில் 2 பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்களும், 3 பேர் பிறமாநிலங்களைச் சேர்ந்தவர்களும் உள்ளனர். தாழ்த்தப்பட்டோர் ஒருவர், அடுத்த மாநிலத்தை சேர்ந்தவர். பழங்குடியின வகுப்பினர் ஒருவர், தமிழகத்தைச் சேர்ந்தவருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.நாடு முழுவதும் 180 பேர் நியமிக்கப்பட உள்ளனர். இவர்களில் மூன்றில் ஒரு பங்கினர் சொந்த மாநிலங்களிலும், இருபங்கு அடுத்த மாநிலங்களிலும் நியமிக்கப்படுவர். பொதுப் பிரிவில் மொத்தம் 94 பேரில், 19 பேர் சொந்த மாநிலத்திலும், மற்றவர்கள் பிற மாநிலங்களிலும் நியமிக்கப்படுவர். பிற்படுத்தப்பட்டோர் 45 பேரில் 22 பேர் சொந்த மாநிலங்களிலும், மற்றவர்கள் பிற மாநிலங்களிலும், தாழ்த்தப்பட்டோர் 28 பேரில், 11 பேர் சொந்த மாநிலங்களிலும், மற்றவர்கள் பிற மாநிலங்களிலும், பழங்குடியினர் 13 பேரில் 9 பேர் சொந்த மாநிலங்களிலும், மற்றவர்கள் பிற மாநிலங்களிலும் நியமிக்கப்பட உள்ளனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி