ஐகோர்ட்டு அதிரடி! கணினி ஆசிரியர்களுக்கு நற்செய்தி! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 26, 2013

ஐகோர்ட்டு அதிரடி! கணினி ஆசிரியர்களுக்கு நற்செய்தி!


காலியாக உள்ள1440கணினி ஆசிரியர்(Computer Teacher)பணியிடங்களை வரும் ஜனவரி31ம் தேதிக்குள் நிரப்ப ஐகோர்ட்டு உத்தரவிட்டதைத் தொடர்ந்து
கணினி ஆசிரியர்கள் பெருமகிழ்ச்சி அடைந்தனர்.1998ம் ஆண்டு எல்காட் நிறுவனத்தால் நிரப்பப்பட்ட தற்காலிக கணினி ஆசிரியர்களை தேர்வு மூலம் பணி நிரந்தரம் செய்ய2006ம் ஆண்டு தமிழக அரசால் முடிவு செய்யப்பட்டது.அதன்பிறகு2008, 2010மற்றும்2012ம் ஆண்டுகளில் ஆசிரியர்தேர்வு வாரியம் மூலம் நடத்தப்பட்ட கணினி ஆசிரியருக்கான சிறப்புத்தேர்வுகளில் முறையே894, 125மற்றும்15எண்ணிகையிலானஆசிரியர்கள் மட்டும்50%மதிப்பெண்களுக்கும் மேல் பெற்று வெற்றி பெற்றனர். அதனைத் தொடர்ந்து1440 தேர்ச்சி பெறாத ஆசிரியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டனர்.இதை எதிர்த்து அவர்களில் சிலர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அந்த வழக்குகள் விசாரிக்கப்பட்டு வந்த நிலையில்,நேற்று அந்த வழக்குகளை விசாரித்த தலைமை நீதிபதிகள் ஆர்.பானுமதி மற்றும் கே.கே. சசிதரன் அவற்றை தள்ளுபடி செய்து, "தகுதித் தேர்வில் வெற்றி பெறாத ஆசிரியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டது சரியே" என கூறினர். மேலும் அவர்கள் கூறியதாவது:"அந்த ஆசிரியர்களுக்கு இரண்டுக்கும் மேற்பட்டு முறைகள் வாய்ப்பு வழங்கப்பட்ட போதும்,அவர்கள் தேர்ச்சி பெறவில்லை. எனவே அவர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டது சரியே. இருந்த போதும் அவர்களின் பெயர்களை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் அவர்கள் முன்னே பெற்றிருந்த பதிவு மூப்புடன் சேர்க்கலாம். தற்போதைய அரசின் கொள்கைப்படி அவர்கள் ஆசிரியர் தேர்வு தகுதித்தேர்விலும் கலந்து கொள்ளலாம். அப்பொழுது வயது வரம்பை தளர்த்தக் கோரி அவர்கள் ஆசிரியர் தேறு வாரியத்தைக் கேட்டுக் கொள்ளலாம்."மேலும் காலியாக உள்ள அந்த1440கம்ப்யூட்டர் டீச்சர் பணியிடங்கள்31-1-2014க்குள் நிரப்பப்பட வேண்டும் என்றும் அவர்கள் உத்தரவிட்டனர்.*இந்த செய்தியை படித்துக் கொண்டிருக்கும் நீங்கள் கணினி படித்தவாரக இருந்தால் நீங்கள் குறித்துக் கொள்ளவேண்டியது.நீதிபதிகள் ஆசிரியர் நியமனம் பற்றி தெளிவாக கூறவில்லை.அடுத்த ஆசிரியர் தகுதித் தேர்வு மே2014க்கு பிறகுதான் நடத்தப்படக் கூடும். இந்த ஆண்டு நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்விலோ பெரும்பாலான கணினி ஆசிரியர்கள் விண்ணப்பிக்கவில்லை.அடுத்த ஜனவரிக்குள் பணி நியமனம் முடிக்கப்பட வேண்டிய நிலையில் அதற்கு முன்பாக கணினி ஆசிரியர்களுக்கு மட்டும் தனியாக தேர்வு நடத்தப்படலாம் அல்லது பதிவு மூப்பு அடிப்படையில் தேர்வு செய்யப்படலாம்.

2 comments:

  1. Ennathan court athiradi order pottalum. CS B.Ed Techr ku govt order podathu.

    ReplyDelete
  2. government pathilai ethirparthu kondu iruicuk sangam (varuthapadatha teacher sangam)

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி