ஆசிரியர் தகுதித் தேர்வு- 9 கேள்விகளுக்கு தவறான விடைகள் அளிக்கப்பட்டுள்ளதால், அவற்றிற்கு முழு மதிப்பெண் வழங்க கோரிய வழக்கில், அரசுத்தரப்பில் பதில் மனு செய்ய, மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 23, 2013

ஆசிரியர் தகுதித் தேர்வு- 9 கேள்விகளுக்கு தவறான விடைகள் அளிக்கப்பட்டுள்ளதால், அவற்றிற்கு முழு மதிப்பெண் வழங்க கோரிய வழக்கில், அரசுத்தரப்பில் பதில் மனு செய்ய, மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவு.

ஆசிரியர் தகுதித்தேர்வு,"கீ" பதில்களில் 9 கேள்விகளுக்கு தவறான விடைகள் அளிக்கப்பட்டுள்ளதால், அவற்றிற்கு முழு மதிப்பெண் வழங்க கோரிய வழக்கில்,
அரசுத்தரப்பில் பதில் மனு செய்ய, மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.விக்கிரமசிங்கபுரம் சூர்யா தாக்கல் செய்த மனு: எம்.எஸ்சி., பி.எட்., படித்துள்ளேன். ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.,) மூலம், 2012 அக்.,14 ல், பட்டதாரி ஆசிரியர் தகுதித் தேர்வு நடந்தது. குழந்தை வளர்ச்சி மற்றும் கற்பிக்கும் கலை, தமிழ், ஆங்கிலம், கணிதம் என, 4 பகுதிகளை கொண்ட வினாத்தாள் தயாரிக்கப்பட்டிருந்தது. எனக்கு "பி" வரிசை வினாத்தாள் வினியோகித்தனர். பாடத்திட்டத்திற்கு அப்பாற்பட்டு, பல கேள்விகள் இடம் பெற்றிருந்தன.டி.ஆர்.பி., இணையதளத்தில் "கீ" பதில்கள் வெளியானது. இதில், 9 கேள்விகளுக்கு தவறாக விடைகள் இடம்பெற்றுள்ளன. அவற்றிற்கு, நான் சரியான விடைகளை எழுதியுள்ளேன்.எனக்கு, 86 மதிப்பெண் வழங்கியுள்ளனர். தேர்ச்சி பெற, 90 மதிப்பெண் வேண்டும். "கீ" பதில்கள் தவறாக உள்ளதால், எனக்கு கூடுதலாக 9 மதிப்பெண் வழங்க உத்தரவிட வேண்டும். இதனால், எனது மதிப்பெண் 95 ஆக உயரும், என குறிப்பிட்டார்.நீதிபதி எஸ்.நாகமுத்து முன், விசாரணைக்கு மனு வந்தது. மனுதாரர் தரப்பில் வக்கீல் பன்னீர்செல்வம் ஆஜரானார். தேர்வு வாரிய தலைவர் பதில் மனு செய்ய, நீதிபதி உத்தரவிட்டார்.

2 comments:

  1. athuthan thirumba re key answer velividuvaargal? Or correction panna or ungaludaiya questionukku sariyaana pathil iruntha aathaarathodu anuppu one week time koduthaargal apothu enna senjaanganu theriyala?

    ReplyDelete
    Replies
    1. sir yanaku oru dout kalviseithi um yen sir amaithiya eruku TET RESULT yapotha varum 23-10-2013la new soinathu kalviseitjhium thugutha frdsss plzzzzz comment painuga uinmayana news yapotha varum plzz trb ta kkatu solu ga its alll pass painavaga life plzz

      Delete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி