முதுநிலை பட்டதாரி ஆசிரியர் நியமன மறுதேர்வுக்கு இடைக்காலத் தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 29, 2013

முதுநிலை பட்டதாரி ஆசிரியர் நியமன மறுதேர்வுக்கு இடைக்காலத் தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.


கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற முதுநிலை பட்டதாரி ஆசிரியர் தமிழ் தேர்வில் 47 வினாக்களில் இருந்த எழுத்து மற்றும் அச்சுப்பிழை குறித்து வழக்கு தொடரப்பட்டிருந்தது. அந்த வழக்கில்
தேர்வை ரத்து செய்து மறுதேர்வு நடத்த வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டிருந்தது. அனைத்து பாடங்களிலும் 2881 காலிபணியிடங்களை நிரப்ப நடைபெற்ற தேர்வில், தமிழ் தேர்வினை 40 ஆயிரம் பேர் எழுதி இருந்தனர்.இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை, முதுநிலைப்பட்டதாரி ஆசிரியர் தேர்வில் தமிழ் தேர்வினை ரத்து செய்து உத்தரவிட்டிருந்தது. மேலும் மறுதேர்வு நடத்த ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு உத்தரவிட்டது. இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த இருவர் அடங்கிய அமர்வு, மறுதேர்வுக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

2 comments:

  1. Additional list cv on Nov 5,6 at ashok nagar Chennai.

    ReplyDelete
  2. தனி நீதிபதியின் Re Exam தீர்ப்பை எதிர்த்து trb மேல்முறையீடு செய்தது அவ்வழக்கு நீதிபதிகள் M. ஜெயச்சந்திரன் ,S. வைத்தியநாதன் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது. TRB. யின் சார்பில் தலைமை வழக்கறிஞர் சோமயாஜி ஆஜராகி TRB பிழையான 40 வினாக்களுக்கு 40 கிரேஸ் மதிப்பெண் வழங்கி பட்டியல் தயாரித்து நீதிமன்றத்தில் தாக்கல் செய்வதாகக் கூறி தனி நீதிபதியின் தீர்ப்புக்கு தடைவிதிக்க கோரினார் .அதனையடுத்து நீதிபதிகள் தனி நீதிபதியின் தீர்ப்புக்கு 2 வாரகால இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டனர். வழக்கு விசாரணை நவம்பர் 12 ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது .

    Source: www.thamaraithamil.blogspot.in

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி