மாற்றுச்சான்றிதழ் வழங்கியதில் மோசடி: தலைமையாசிரியர் மீது வழக்கு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 28, 2013

மாற்றுச்சான்றிதழ் வழங்கியதில் மோசடி: தலைமையாசிரியர் மீது வழக்கு.


ராஜபாளையம் அருகே மோசடியாக பலருக்கு பள்ளி மாற்றுச்சான்றிதழ் வழங்கியதாக தலைமையாசிரியர் மீது கோர்ட் உத்தரவுப்படி
போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.ராஜபாளையம் பெத்தையாபிள்ளை தெருவை சேர்ந்தவர் சதாசிவம், 66. இவர், ஊஞ்சாம்பட்டி தனியார் உயர்நிலைப்பள்ளியின் செயலராக உள்ளார். இந்தப் பள்ளியில் 2005 முதல் 2011 வரை ராஜபாளையம் வடக்கு ஆண்டாள்புரத்தை சேர்ந்த சுப்பையா, 44, தலைமையாசிரியராக பணிபுரிந்தார். பின் சத்துணவு ஊழியரை தாக்கியதாக பிரச்னையில் சஸ்பெண்ட் ஆனார்.சமீபத்தில், பள்ளிக்கு வந்தவர்கள் தங்களின் மாற்றுச்சான்றிதழ் நகல் கோரினர். பள்ளி நிர்வாகம் சோதித்தபோது அடிக்கட்டையில் குறிப்பிட்ட நபர்களின் மாற்றுச்சான்றிதழ்கள் இல்லை. விசாரணையில், தலைமையாசிரியராக இருந்த சுப்பையா, 32 பேருக்கு மோசடி மாற்றுச்சான்றிதழ் வழங்கியது தெரிந்தது.இதுகுறித்து, சுப்பையா மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ராஜபாளையம் கோர்ட்டில் பள்ளி செயலாளர் சதாசிவம், மனு தாக்கல் செய்தார். மாஜிஸ்திரேட் அருணாசலம் உத்தரவுப்படி ராஜபாளையம் தெற்கு போலீசார் சுப்பையா மீது மோசடி வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி