திண்டுக்கல், தஞ்சாவூர் மாநகராட்சிகள் ஆகின்றன: சட்டசபையில் மசோதா தாக்கல். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 29, 2013

திண்டுக்கல், தஞ்சாவூர் மாநகராட்சிகள் ஆகின்றன: சட்டசபையில் மசோதா தாக்கல்.


திண்டுக்கல், தஞ்சாவூர் நகராட்சிகள் மாநகராட்சிகளாக நிலை உயர்த்தப்படுகின்றன.இதற்கான மசோதாக்கள் சட்டசபையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டன.

இரு மசோதாக்கள்

சட்டசபையில் நேற்று
கேள்வி நேரம் முடிந்ததும், நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி, சட்டம், நீதிமன்றங்கள் மற்றும் சிறைச்சாலைகள் துறை அமைச்சர் கே.பி.முனுசாமி இரண்டு மசோதாக்களை தாக்கல் செய்தார்.அவற்றில் கூறப்பட்டு இருப்பதாவது:–

தஞ்சாவூர் மற்றும் திண்டுக்கலில் மக்கள் தொகை பெருக்கத்துக்கு ஏற்ப அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்வதை முன்னிட்டு வகை செய்யவேண்டிய பணிகளின் அளவீட்டினையும், மக்களின் வாழ்க்கைத்தரத்தையும் மேம்படுத்துவதை கருத்தில் கொண்டு, ‘‘தஞ்சாவூர், திண்டுக்கல் நகராட்சிகளை மாநகராட்சிகளாக நிலை உயர்த்தப்படும்’’ என்று, பட்ஜெட் கூட்டத்தொடரில் முதல்–அமைச்சர் ஜெயலலிதா அறிவித்தார்.அதற்கு செயல்வடிவம் கொடுக்கும் வகையில், தேவைப்படும் மாற்றமைப்புகளுடன், ஒரு சிறப்பு சட்டத்தை இயற்ற முடிவு செய்துள்ளது. அதற்கு செயல்வடிவம் கொடுப்பதற்கு, இந்த சட்டமுன்வடிவு செயல்வடிவம் கொடுக்கவிழைகிறது.இவ்வாறு மசோதாவில் கூறப்பட்டுள்ளன.

செயல் வடிவம் பெறுகின்றன

தஞ்சாவூர், திண்டுக்கல் மாநகராட்சி குறித்த முதல்–அமைச்சர் ஜெயலலிதாவின் அறிவிப்புக்கு செயல்வடிவம் கொடுக்கும் வகையிலும் மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளன.இந்த இரு மசோதாக்களும், இந்த கூட்டத்தொடரில் நிறைவேற்றப்படுகின்றன.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி