ஊராட்சி ஒன்றியப் பள்ளியை சீரமைத்த வெளிநாட்டு மாணவர்கள். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 24, 2013

ஊராட்சி ஒன்றியப் பள்ளியை சீரமைத்த வெளிநாட்டு மாணவர்கள்.

வத்தலக்குண்டு அருகே,பழுதடைந்த கட்டடத்தில் இயங்கிய ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியை, வெளிநாட்டு மாணவர்கள் சீரமைத்தனர்.திண்டுக்கல் மாவட்டம்,
வெங்கடாஸ்திரிகோட்டையில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இங்கு 150 மாணவர்கள் படித்தனர். பள்ளி கட்டட ஓடுகள் சேதமடைந்தன. கிராமத்தினர், ஆசிரியர்கள், ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்திடம் சீரமைக்க பலமுறை வலியுறுத்தியும் பலன் இல்லை. இதனால் மாணவர்களின் எண்ணிக்கை 65 ஆகக் குறைந்தது.இந்நிலையில், கோம்பைப்பட்டி ஊராட்சி சின்னுபட்டியில் மதுரை, "புராஜக்ட் அப்ராடு" தொண்டு நிறுவனம் மூலம் வெளிநாடுகளைச் சேர்ந்த கல்லூரி மாணவர்கள் இயற்கை வேளாண்மை குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்க வந்தனர். அவர்களிடம் பள்ளியின் நிலை குறித்து விளக்கப்பட்டது. மதுரையில் உள்ள தொண்டு நிறுவனம் மூலம்மறுசீரமைப்பு பணிகள் செய்ய முடிவானது.இத்தொண்டு நிறுவனத்திற்கு, அமெரிக்கா, ஐரோப்பா, கனடா, இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த, கல்லூரி மாணவர்கள் சுற்றுலா வந்துள்ளனர். அவர்களிடம், பள்ளி சீரமைப்புகுறித்து தொண்டு நிறுவனத்தினர் கூறினர். அவர்களும் ஆர்வமாக பணி செய்ய ஒப்புக்கொண்டனர். நேற்று, 40 பேர் கொண்ட குழுவினர், பள்ளி கூரையில் பழுதடைந்தஓடுகளை மாற்றி, சுற்றுச்சுவர் கட்டி பள்ளியை சீரமைத்தனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி