சேதமடைந்த கட்டடங்களில் பாடம் நடத்த வேண்டாம்: பள்ளிக் கல்வித்துறை எச்சரிக்கை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 28, 2013

சேதமடைந்த கட்டடங்களில் பாடம் நடத்த வேண்டாம்: பள்ளிக் கல்வித்துறை எச்சரிக்கை


பருவமழை துவங்கிவிட்டதால் சேதமடைந்த அரசு பள்ளி கட்டடங்களில் மாணவர்களுக்கு பாடம் நடத்த வேண்டாம் என தலைமையாசிரியர்களுக்கு பள்ளிக் கல்வித்துறை
அறிவுரை வழங்கி உள்ளது.தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பருவமழை துவங்கிய தொடர்ந்து பெய்துவருகிறது. குறிப்பாக வட மாவட்டங்களில் நல்ல மழை பெய்து வருகிறது. காஞ்சிபுரம் மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடும் அளவுக்கு மழைபெய்து வருகிறது.ஆனால் தென் மாவட்டங்களில் இன்னும் போதிய மழை பெய்ய துவங்காவிட்டாலும் அடுத்துவரும் நாட்களில் நல்ல மழை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இந்நிலையில் பருவ மழையை தொடர்ந்து மாநிலம் முழுவதும் வருவாய்த்துறையினர் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். கண்மாய்கள், குளங்களை 24 மணிநேரமும் கண்காணிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.இதைப்போல் தமிழகத்தில் அரசு பள்ளிகளில் விபத்தை தவிர்க்கும் பொருட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சேதமடைந்த கட்டடங்களில் வைத்து மாணவர்களுக்கு பாடம் நடத்தவேண்டாம் என, தலைமையாசிரியர்களுக்கு பள்ளி கல்வித்துறை அறிவுரை வழங்கி உள்ளது.மேலும், பள்ளிகளில் எம்.எல்.ஏ., எம்.பி., நிதியில் புதிய வகுப்பறை கட்டடங்கள் கட்டப்பட்டு பல மாதமாக திறக்கப்படாமல் இருந்தால் அவற்றை பயன்படுத்திக் கொண்டு வேறொரு நாளில் அதற்கு முறைப்படி திறப்பு விழா நடத்திக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.மதியத்திற்குப்பின் மழை வருவதற்கான அறிகுறி தென்பட்டால் மாணவர்கள் மழையில் நனையாமல் இருப்பதற்காக குறிப்பிட்ட நேரத்திற்கு முன்னதாகவே பள்ளி வேலை நேரத்தை முடித்து அவர்களை வீட்டிற்கு அனுப்ப வேண்டும்.மேலும்பள்ளி வளாகத்தில் தேங்கும் மழைநீரை உடனுக்குடன் அகற்றவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். டெங்கு காய்ச்சல் போன்ற அறிகுறிகள் தெரிந்தால் உடனடியாக தெரிவிக்கவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி