செஸ் விளையாட்டை ஊக்குவிக்கும் அரசின் சிறப்பு திட்ட;ம்: அரசு பள்ளி மாணவர்கள் ஏமாற்றம் ஆசிரியர்கள் ஆதங்கம். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 26, 2013

செஸ் விளையாட்டை ஊக்குவிக்கும் அரசின் சிறப்பு திட்ட;ம்: அரசு பள்ளி மாணவர்கள் ஏமாற்றம் ஆசிரியர்கள் ஆதங்கம்.

"செஸ்'விளையாட்டை ஊக்கவிக்கும்,மாநில அரசின் சிறப்பு திட்டம்,அரசு பள்ளி மாணவ,மாணவியருக்கு ஏமாற்றத்தைஏற்படுத்தியுள்ளது.மாநில அரசு,பள்ளிகளில் செஸ் விளையாட்டை ஊக்குவிக்க,மாநில அளவிலான செஸ் போட்டி நடத்த உள்ளது;முதல் பரிசாக
ஒரு லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்பட உள்ளது. அதற்காக,மாவட்டந்தோறும்,கல்வி மாவட்ட,மாவட்ட,மண்டல அளவில் போட்டிகள் நடத்தப்பட்டன;மாநிலம் முழுக்க உள்ள மாவட்டங்கள்,16 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு,ஒவ்வொரு மண்டலத்தில் இருந்தும் 24 மாணவ,மாணவியர் வீதம்,மாநில போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

சமீபத்தில் நடந்து முடிந்த மண்டல அளவிலான போட்டிகளில்,அரசு,ஊராட்சி ஒன்றிய,உதவி பெறும் மற்றும் மெட்ரிக்.,பள்ளி மாணவ,மாணவியர் பங்கேற்றனர். பெரும்பாலான மாவட்டங்களில்,அரசு பள்ளி மாணவ,மாணவியரை பின்னுக்கு தள்ளி,மெட்ரிக்.,மற்றும் உதவி பெறும் பள்ளிமாணவ,மாணவியர் வெற்றி பெற்றுள்ளனர்.ஆசிரியர்கள் ஆதங்கம்:அரசு பள்ளி ஆசிரியர்கள் சிலர் கூறியதாவது:"பணக்கார விளையாட்டு'எனப்படும் செஸ் விளையாட்டை,மெட்ரிக்.,மற்றும் உதவி பெறும் பள்ளி மாணவ,மாணவியர் வீடுகளிலேயே விளையாடுகின்றனர்;பல மாணவர்கள் ஆங்காங்கே உள்ள பயிற்சி மையங்களுக்கு சென்று,அதிகபட்சம் மாதம் 8,000 ரூபாய் வரை கட்டணம் செலுத்தி,பயிற்சி பெறுகின்றனர். விளையாடும் போது, "டைமர்'உபகரணம் வைத்து,சர்வதேச விதிகளுக்கு உட்பட்டுவிளையாடுகின்றனர்.மாறாக,கிராமப்புறஅரசு,ஊராட்சி ஒன்றிய பள்ளிகளில் படிக்கும் ஏழை,எளிய குடும்பத்தை சேர்ந்த மாணவ,மாணவியருக்கு,செஸ் விளையாட்டு என்பது புதிது;அவர்களில் பலர் செஸ் விளையாடினாலும், "டைமர்'இல்லாமல்,விதிமுறைகள் குறித்து தெளிவான அறிவு இல்லாமல் தான் விளையாடுகின்றனர்.

சமீபத்தில் நடந்த மண்டல அளவிலான போட்டிகளில்,அரசு பள்ளி மாணவர்கள்,மெட்ரிக்.,பள்ளி மாணவர்களுடன் மோதினர். மெட்ரிக்.,பள்ளி மாணவ,மாணவியர்"டைமர்'வைத்து,நுட்பத்துடன் விளையாடிதை பார்த்து,அரசு பள்ளி மாணவர்கள்பயந்து,நிலை குலைந்து போயினர்.மெட்ரிக்.,மற்றும் உதவி பெறும் பள்ளி மாணவ,மாணவியருக்கு இணையான திறமையைஅரசு பள்ளி மாணவ,மாணவியரும் பெற வேண்டும் என்ற நோக்கில் அறிவிக்கப்பட்ட மாநில அரசின் சிறப்பு திட்டம்,அரசு பள்ளி மாணவர்களுக்கு முழு பயனைஅளிக்கவில்லை.இவ்வாறு,ஆசிரியர்கள் கூறினர்.

செஸ் போர்டு எங்கே?

மாநில அரசின் இச்சிறப்பு திட்டத்தின் கீழ்,ஒவ்வொருஅரசு,ஊராட்சி ஒன்றிய,உதவி பெறும் பள்ளிகளுக்கு,தலா 900 ரூபாய் வீதம் ஒதுக்கப்பட்டு,அதில் 9 செஸ் பலகைகள் வாங்கப்பட வேண்டும்;பள்ளிகள் தோறும் "செஸ் கிளப்'உருவாக்கப்பட வேண்டும்'என,அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை,பெரும்பாலான பள்ளிகளுக்கு ஒரே ஒரு செஸ் பலகை மட்டுமே வழங்கப்பட்டுள்ளது;பல பள்ளிகளில் செஸ் கிளப்புகள் துவங்கப்படவில்லை. எனவே,இச்சிறப்பு திட்டத்தில் உள்ள குறைகளை களைய,மாநில அரசு முன்வர வேண்டும்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி