ஆங்கில வழி கல்வி: ஆசிரியர்கள் நியமனமின்றி தவிக்கும் பள்ளிகள். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 20, 2013

ஆங்கில வழி கல்வி: ஆசிரியர்கள் நியமனமின்றி தவிக்கும் பள்ளிகள்.

தொடக்க பள்ளிகளில், ஆங்கில வழி கல்விக்கு தனிப்பிரிவு ஏற்படுத்தப்பட்டு, மாணவர்கள் பயின்று வரும் வேளையில், ஆசிரியர் நியமனமின்றி, பள்ளி ஆசிரியர்களே ஆசிரியர்களை நியமித்து பாடம் நடத்த
வேண்டியதுள்ளது.மெட்ரிக்., பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்க வேண்டுமென்ற பெற்றோர்களின் ஆசையால் அரசு தொடக்க பள்ளிகளில், மாணவர் சேர்க்கை குறைந்தது.அரசு பள்ளிகளில் ஆங்கில வழி கல்வியை, இந்த ஆண்டு முதல் அரசு அறிமுகப்படுத்தி செயல்படுத்தி வருகிறது. இவர்களுக்கு தனி புத்தகங்கள், தனி வகுப்பறை, தனி ஆசிரியர் வசதியை ஏற்படுத்தி கொடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.10 மாணவர்கள் இருந்த பள்ளியில், தற்போது 30க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வரும் நிலை உள்ளது. ஆங்கில வழி புத்தகங்கள் வழங்கப்பட்டுள்ளது. ஏற்கனவே உள்ள வகுப்பறையின் ஒரு பகுதி, ஆங்கில வழிக்குஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால், தனியாக ஆசிரியர் நியமனம் இதுவரை இல்லை. இதனால், பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலம், கூடுதல் ஆசிரியர்களை, அந்தந்த பள்ளியின் தலைமை ஆசிரியரே நியமித்து வருகின்றனர்.நியமனம் மட்டுமே பெற்றோர் ஆசிரியர் கழகத்தால் மேற்கொள்ளப்படுகிறது. ஆனால்,சம்பளம் அந்த பள்ளியில் பணிபுரியும் தலைமை ஆசிரியர், ஆசிரியர் ஆகியோர் தான் வழங்க வேண்டியதுள்ளது. மாணவர்கள் எண்ணிக்கை வேண்டும் என்பதால், ஆசிரியர்களும், தங்கள் சம்பளத்தின் ஒரு பகுதியை இவர்களுக்கு வழங்கி வருகின்றனர்.ஆசிரியர் ஒருவர் கூறியதாவது: அரசு திட்டங்களை அமல்படுத்தும்போது, அதற்குரிய கட்டமைப்பை மேம்படுத்தவும் வேண்டும். ஆரம்ப பள்ளிகளில், ஆரம்பிக்கப்பட்ட ஆங்கில வழி கல்விக்கு, ஆசிரியர் நியமனம் இதுவரை இல்லை. தற்காலிக அடிப்படையிலாவது அரசு நியமிக்க வேண்டும்.எனவே, தமிழகம் முழுவதும் உள்ள ஆங்கில வழி கல்வி தொடக்க பள்ளிகளுக்கு, தனிஆசிரியரை நியமித்து, மாணவர்களின் ஆரம்ப கல்வியை மேம்படுத்த வேண்டும் என்றார்.

1 comment:

  1. atha B,T trs niraya per pass panirkaganu expect panromnu trb lasolirkangakla itha fill panalamla

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி