தமிழ் வழியில் படித்து தேர்ச்சி பெற்றும் பணி நியமன ஆணை வழங்கப்படவில்லை என முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 19, 2013

தமிழ் வழியில் படித்து தேர்ச்சி பெற்றும் பணி நியமன ஆணை வழங்கப்படவில்லை என முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

தமிழகம் முழுவதும் காலியாக இருந்த 2,900 பட்டதாரி ஆசிரியர்பணியிடங்களுக்கான தேர்வு கடந்த 2012ஆம் ஆண்டு நடைபெற்றது. ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் நடத்தப்பட்ட இந்தத்தேர்வை ஒன்றரை
லட்சத்துக்கும் மேற்பட்டோர் எழுதினர்.இதில் ஆங்கிலம் உள்ளிட்ட பிறமொழி பாடங்களில் படித்து தேர்ச்சி பெற்றவர்களுக்கு, சான்றிதழ் சரிபார்க்கப்பட்டு பணி நியமன ஆணை வழங்கப்பட்டுள்ளது.அதேநேரத்தில், சான்றிதழ் சரிபார்க்கப்பட்டும் தமிழ் வழியில் தேர்ச்சி பெற்ற ஆயிரத்து 200 நபர்களுக்கு பணி நியமனம் வழங்கப்படவில்லை என்று புகார் கூறப்படுகிறது.இதுதொடர்பாக திருச்சி மாவட்ட ஆட்சியரை சந்தித்து கரூர், ஈரோடு உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் மனு கொடுத்தனர்.
இதுகுறித்து, ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணை இயக்குநர் அறிவொளியிடம் தொடர்பு கொண்டபோது, நமது கேள்விக்கு (puthiyathalaimurai) பதிலளிக்க மறுத்து தொடர்பை துண்டித்துவிட்டார்.

1 comment:

  1. what is the qualification for tamil medium quota

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி