அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் ஒரே மாதிரியான பாடத்திட்டம் . - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 19, 2013

அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் ஒரே மாதிரியான பாடத்திட்டம் .

20 பல்கலைக்கழகங்கள் தமிழகத்தில் 20 அரசு பல்கலைக்கழகங்கள் உள்ளன. இதில், பொறியியல், விவசாயம், மருத்துவம், கால்நடை மருத்துவம், உடற்கல்வி, கல்வியியல், மீன்வளம் ஆகிய தொழில்நுட்பப்
பல்கலைக்கழகங்களும் அடங்கும். சென்னை பல்கலைக்கழகம், மதுரை காமராஜர், கோவை பாரதியார், திருச்சி பாரதிதாசன் உள்ளிட்ட பல்கலைக்கழகங்கள்கலை- அறிவியல் படிப்புகள் சம்பந்தப்பட்டவை . அவை தங்கள் அதிகார வரம்புக்குட்பட்ட கலை -அறிவியல் கல்லூரிகளுக்கு இணைப்பு அங்கீகாரம், பாடத்திட்டத்தை உருவாக்குவது, தேர்வுகள் நடத்தி பட்டச் சான்றிதழ்கள் வழங்குவது போன்ற பணிகளை மேற்கொள்கின்றன.தற்போது ஒவ்வொரு பல்கலைக்கழகத்திலும் வெவ்வேறு பாடத்திட்டம் நடைமுறையில் இருந்து வருகிறது. உதாரணத்துக்கு, ஒரு பல்கலைக்கழகத்தின் பி.ஏ. வரலாறு படிப்புக்கான பாடத்திட்டம் மற்றொரு பல்கலைக்கழகத்தின் இதேபட்டப் படிப்பைப் போல் இருப்பதில்லை. இதனால், ஒரே பட்டப் படிப்பு அல்லது முதுகலை பட்டப் படிப்பு என்றாலும் ஒவ்வொன்றும் மற்ற பல்கலைக்கழக படிப்புக்கு இணையானதா என்ற சிக்கல் அடிக்கடி எழுகிறது. இந்த சிக்கலுக்கு தீர்வு காணப்பதற்காகவே டி.என்.பி.எஸ்.சி.யில் இணைகல்வி தகுதிக் குழு (ஈகுவேலன்ட் கமிட்டி) என்ற சிறப்பு குழு உள்ளது. இனிஒரே பாடத்திட்டம் இதுபோன்று பிரச்சினை எழும் நேரங்களில் அந்த குழு கூடி சர்ச்சைக்குரிய பட்டப் படிப்புக்கான பாடத்திட்டத்தை ஆராய்ந்து அது இணையானதா? இல்லையா? என்பதைமுடிவு செய்யும்.ஒரே பட்டப் படிப்பு என்ற போதிலும் பாடத்திட்டம் பல்கலைக்கழகத்துக்கு பல்கலைக்கழகம் வேறு வேறாக இருப்பதால்மாணவர்களும் சிரமங்களை சந்திக்க வேண்டியுள்ளது. இந்நிலையில், தமிழ்நாட்டில் உள்ள அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் ஒரேமாதிரியான பொதுப்பாடத்திட்டத்தைக் கொண்டுவர மாநில உயர்கல்வி கவுன்சில் முடிவு செய்துள்ளது. மாணவர்களுக்கு வரப்பிரசாதம் பாடத்திட்டம் எல்லா பல்கலைக்கழகங்களிலும் ஒரே மாதிரியாக இருக்கும்பட்சத்தில் ஒரு கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் மாநிலத்துக்குள் எளிதாக வேறு கல்லூரிக்கு மாறி படிப்பை தொடரலாம். அனைத்துப் பல்கலைக்கழகங்கள் வழங்கும் பட்டமும் இணையானதாக ஏற்றுக்கொள்ளப்படும். பாடத்திட்டம் ஒன்றுபோல் இருப்பதால் கல்வித்தரமும் மாநிலம் முழுவதும் சமமாக இருக்கும். பொதுப்பாடத்திட்ட கல்விக்குழு அனைத்து பல்கலைக்கழகங்களிலும் ஒரேமாதிரியான பாடத்திட்டத்தை கொண்டுவரும் வகையில் ஒருங்கிணைந்த பொதுப் பாடத்திட்ட கல்விக்குழு விரைவில் அமைக்கப்பட இருப்பதாகவும், அனைத்து பல்கலைக்கழகங்களையும் சேர்ந்த பேராசிரியர்கள் இக் குழுவில் இடம்பெறுவார்கள் என்றும் மாநில உயர்கல்வி கவுன்சில் உறுப்பினர்-செயலர் பேராசிரியர் கரு.நாகராஜன் தெரிவித்தார்.

1 comment:

  1. It is really very good decision.Because of this equivalence problem so many talented candidates were rejected by TRB even after clearing tet /pg trb.Many degrees rejected on the ground of equivalency have now been accepted as equivalent but the fate of those who were rejected last time is still unknown.Let us hope here after such thing never happen in future.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி