எஸ்.எஸ்.ஏ., ஆய்வுக்கூட்டம் திட்ட இயக்குனர் பூஜா குல்கர்னி பங்கேற்பு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 18, 2013

எஸ்.எஸ்.ஏ., ஆய்வுக்கூட்டம் திட்ட இயக்குனர் பூஜா குல்கர்னி பங்கேற்பு.

ஒருங்கிணைந்த பெரம்பலூர், அரியலூர் மாவட்டத்திலுள்ள, 10யூனியன்களிலும், அனைவருக்கும் கல்வி இயக்க செயல்பாடுகள் குறித்து, மாநிலத்திட்ட இயக்குனர் பூஜா குல்கர்னி தலைமை ஆய்வு கூட்டம்
நடந்தது.பெரம்பலூர் கலெக்டர் தரேஷ்அஹமது முன்னிலை வகித்தார். ஆய்வு கூட்டத்தில் அனைவருக்கும் கல்வி இயக்க செயல்பாடுகளான, பள்ளிகளில் செயல்வழி கற்றல் கல்வி முறை, படைப்பாற்றல் கல்வி முறை, ஆசிரியர்களுக்கான பயிற்சி முறைகள், பள்ளி செல்லா குழந்தைகளுக்கான உண்டு உறைவிட மையங்களின் செயல்பாடுகள், மாற்றுத்திறன் கொண்டோர்களுக்கான உண்டு உறைவிட மையங்களின் செயல்பாடுகள், பெண்களுக்கான சிறப்பு உண்டு உறைவிட மைய செயல்பாடுகள், அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் மூலம் பள்ளிகளுக்கு வழங்கப்பட்ட பள்ளி வகுப்பறை கட்டிட பணிகள், சுற்றுசுவர் பணிகள், கழிப்பறை பணிகள் ஆகியவைகளின் முன்னேற்றம், ஆசிரியர்களுக்கான ஊதிய விவரங்கள் உள்ளீட்ட அனைத்து செயல்பாடுகள் பற்றி, விரிவாக மாநிலத்திட்ட இயக்குனர் ஆய்வு மேற்கொண்டு, அறிவுரை வழங்கினார்.மாநில திட்ட இயக்குனர் ஆய்வின்போது, ஒவ்வொரு ஒன்றியம் வாரியாக அரசு பள்ளிகளில் மாணவ, மாணவிகள் தமிழ், ஆங்கிலம் மற்றும் கணிதம் ஆகிய பாடங்களில், படிக்கும் திறன், அடைவுத்திறன் ஆகியவைகள் பற்றி கேட்டறிந்து, மாணவ, மாணவிகளின் கற்றல் திறன் குறைவாக உள்ள பள்ளிகளையும் அதற்கான காரணங்களையும் ஆய்வு செய்தார்.அப்போது அனைத்து பள்ளிகளிலும் மாணவ, மாணவிகளின் கற்றல் திறன் மேம்பட, அனைத்து அலுவலர்களும் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என அறிவுறுத்தினார்.ஒன்றியங்களில் வட்டார வள மைய மேற்பார்வையாளர்கள், உதவி மற்றும் கூடுதல் உதவி தொடக்கக்கல்வி அலுவலர்கள், பள்ளிகளை அடிக்கடி பார்வையிட்டு ஆசிரியர்களுக்கும், தலைமையாசிரியர்களுக்கும் தேவையான அறிவுரைகள் வழங்கவேண்டும் என அறிவுறுத்தினார்.ஆய்வு கூட்டத்தில் அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் சி.இ.ஓ., பரிமளா, சி.இ.ஓ., மகாலிங்கம், தொடக்கக்கல்வி அலுவலர் எலிசபெத் உட்பட பலர் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி