இன்டர்னல் மதிப்பெண்களை பகுப்பாய்வு செய்ய தொடங்கியது சி.பி.எஸ்.இ! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 22, 2013

இன்டர்னல் மதிப்பெண்களை பகுப்பாய்வு செய்ய தொடங்கியது சி.பி.எஸ்.இ!

இன்டர்னல் மதிப்பெண்கள் சரியான முறையில்தான் வழங்கப்படுகிறதாஎன்பதை சோதனை செய்யும் தனது செயல்பாட்டை சி.பி.எஸ்.இ., தொடங்கியுள்ளது. இதன்பொருட்டு,
இன்டர்னல் மதிப்பெண்கள் எதன் அடிப்படையில் வழங்கப்பட்டது என்பதற்கான ஆதாரங்கள் சேகரிக்கப்படும்.இன்டர்னல் மதிப்பெண்கள் சரியாகத்தான் வழங்கப்படுகிறதா என்பதை உறுதிசெய்ய, CBSE பள்ளிகளால் மதிப்பிடப்பட்ட உபகரணங்கள் மறுசரிபார்ப்பு செய்யப்படும்.
இந்த செயல்பாடு, சுருக்கமாக EA என்று அழைக்கப்படுகிறது. இந்த மறுசோதனை செயல்பாடு, குறிப்பாக, 9 மற்றும் 10ம் வகுப்புகள் தொடர்பாகவே செய்யப்படுகிறது. ஏனெனில், அந்த வகுப்புகளில்தான், தொடர்ச்சியான மற்றும் விரிவான பகுப்பாய்வின்(CCE) கீழ் வருகின்றன. இந்தக் கல்வியாண்டு முதல், formative assessment தொடர்பான EA -ஐ மட்டும் CBSEசேகரிக்கும்.CCE முறையின் கீழ், மாணவர்களின் திறன்கள், பார்மேடிவ் (practicals,projects etc..,) மற்றும் சம்மேடிவ் (theory paper) ஆகிய இரு முறைகளின் கீழ் சோதிக்கப்படுகின்றன. பார்மேடிவ் சோதனையில், இந்தி, ஆங்கிலம், கணிதம், அறிவியல் மற்றும் சமூக அறிவியல் ஆகியவற்றில் EA சேகரிக்கப்படும்.இத்தகைய பகுப்பாய்வுகள் தொடர்பாக CBSE வட்டாரங்கள் கூறுவதாவது: மாணவர்களின் திறன்களை சிறப்பான முறையில் பகுப்பாய்வு செய்வதே, எந்த ஒரு கல்வித்திட்டத்தின் வெற்றிக்கும் முக்கிய காரணியாகும். நடைமுறை சார்ந்த, எளிதானமற்றும் அழுத்தமற்ற பகுப்பாய்வுதான், மாணவர்களின் ஆளுமைத்திறன் மேம்பாட்டிற்கு உதவும்.
EA திட்டத்தின்படி, சோதனை மேற்கொள்ளப்படுவதற்கான CBSE பள்ளிகள், பிராந்திய அலுவலகத்தால் மேலோட்டமான முறையில் தேர்வு செய்யப்படுகின்றன. தேர்வு செய்யப்பட்ட பள்ளிகள், 15 பதில் தாள்கள்(answer sheets) மற்றும்மதிப்பாய்வு விபரங்களை, 5 பிரதான பாடங்களுக்காக அனுப்ப வேண்டும். கிரேடுகளின் அடிப்படையில் இந்த பதில் தாள்கள் பிரிக்கப்படும்.மேல்நிலை கிரேடு, இடைநிலை கிரேடு மற்றும் கீழ்நிலை கிரேடு என்ற வகைப்பாடுகளின் கீழ், அந்த 15 பதில் தாள்களும், ஐந்து ஐந்தாக பிரிக்கப்படும். இந்த பதில் தாள்கள் அனைத்தும் சேர்ந்து EA -க்கள் என்று அழைக்கப்படுகின்றன.EA -க்கள் மற்றும் அளிக்கப்படும் மதிப்பெண்கள் ஆகியவை, பாட மதிப்பீட்டு நிபுணர்களால் சரிபார்க்கப்படுகின்றன மற்றும் பிராந்திய அளவில் CBSE -ஆல் பட்டியலில் சேர்க்கப்படுகின்றன. தேர்வு செய்யப்பட்ட பள்ளிகளின் விபரங்கள், CBSE வலைதளத்தில் வெளியிடப்படும்.பிராந்திய மதிப்பீட்டாளர்கள் தரும் அறிக்கைகளின் அடிப்படையில், பள்ளிகளின் இன்டர்னல் மதிப்பெண் வழங்கும் தரநிலைகள் கணக்கில் கொள்ளப்படுகின்றன.
மேலும், இந்த விஷயத்தில் ஏதேனும் மேம்பாடு தேவையென்றால், CBSE அது தொடர்பான ஆலோசனைவழங்கும். நவம்பர் 15ம் தேதிக்குள் தங்களின் EA -க்களை, பிராந்திய அலுவலகங்களுக்கு அனுப்பி வைக்கும்படி CBSE பள்ளிகள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளன.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி