மெட்ரிக் பள்ளிகளில் அன்னையர் குழுஏற்படுத்த ஆய்வாளர் வலியுறுத்தல். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 27, 2013

மெட்ரிக் பள்ளிகளில் அன்னையர் குழுஏற்படுத்த ஆய்வாளர் வலியுறுத்தல்.

மெட்ரிக் பள்ளிகளில் அன்னையர் குழுவை ஏற்படுத்த வேண்டும் என மெட்ரிக் பள்ளிகள் ஆய்வாளர் பிச்சையப்பன் வலியுறுத்தினார். பிச்சையப்பன் கூறியதாவது:

பள்ளி வளாகத்திற்குள் பெற்றோர்களை அனுமதிக்கக்கூடாது.அதற்கு பதிலாக குழந்தைகளின் தாசகள் 5 பேரை உள்ளடக்கிய அன்னையர் குழுவை உருவாக்கி பள்ளியின் சுற்றுப்புறம், சுகாதாரம், குடிநீர், வசதிகளை ஆராய்ந்து தங்கள் கருத்துக்களை அங்கு வைக்கப்பட்டுள்ள குறிப்பேடுகளில் பதிய வேண்டும்.அடுத்த வாரத்திற்குள் அன்னையர்களின் புகாருக்கு உரிய தீர்வு காணப்பட வேண்டும். இதுபோன்று வாரம் தோறும் 5 அன்னையர்கள் கொண்ட அன்னையர் குழுவை உருவாக்கி கட்டாயமாக செயல்படுத்த மெட்ரிக் பள்ளிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.அரசு விடுமுறை நாட்களில் பள்ளிகள் கண்டிப்பாக இயங்கக் கூடாது. மாலை நேரங்களில் சிறப்பு வகுப்புகள், 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு இரவு நேர வகுப்புகளை நடத்துவது தவறு. அவ்வாறு நடத்தும் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி இல்லாத பள்ளிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும். கல்விக் கட்டணம் தாமதமாக செலுத்துவதற்கு அபராதம் வசூலிப்பது தவறு. அவ்வாறு வசூலிக்கும் பள்ளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு மெட்ரிக் பள்ளிகள் ஆய்வாளர் பிச்சையப்பன் கூறினார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி